“விஜய்க்கு இந்துக்கள் ஓட்டுத் தேவையில்லை” - தவெகவிற்கு ஷாக் கொடுத்த ஹெச்.ராஜா...!
அரசியலை படித்து விட்டு அரசியல் பேசுங்கள் என தவெக விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.
கோபியில் இந்து முன்னனி அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைக்க கோபி வருகை தந்த பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அரசியலை படித்து விட்டு அரசியல் பேசுங்கள் என தவெக விஜய்க்கு அறிவுரை வழங்கினார். சிறுபான்மையினர் வாக்கு மட்டும் போதும் இந்துக்கள் வாக்கு தேவை இல்லை என்பது விஜய் பேசியதிலேயே தெரிகிறது - என்றார்.
அறிவு இல்லாத நபர் தான் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.அமெரிக்காவின் ஏற்றுமதி பொருட்கள் மீதான நடவடிக்கைக்கு எதிராக இந்திய மக்கள், ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு குட்டு... கூட்டணிக்கு வேட்டு... அதிமுகவுக்கு தூது... ஒரே நேரத்தில் ஓங்கியடித்த ஓபிஎஸ்...!
பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது பொருளாதார நடவடிக்கை மட்டுமே என்பதால் அமெரிக்கா பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING ராங்கா போன ராம்ப் வாங்க்... தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு...!