×
 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... கைதி அருளுக்கு இடைக்கால ஜாமின்..! ஹைகோர்ட் நிபந்தனை..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள அருளுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தனது புதிய வீட்டு கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இந்தக் கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே போலீஸார் பலரை கைது செய்தனர். அதில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர்தான் வழக்கறிஞரான ஜி. அருள்.அருள் யார் என்றால், அவர் திருநின்றவூரைச் சேர்ந்தவர், வழக்கறிஞராக பணியாற்றுபவர்.

கொலை நடந்த உடனேயே அவர் சரண் அடைந்தவர்களில் ஒருவராக இருந்தார். பொன்னை பாலு, ராமு, திருவெங்கடம் உள்ளிட்டோருடன் சேர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அருள் என்பவர் ஆற்காடு சுரேஷின் மைத்துனர்., அதாவது சுரேஷின் மனைவியின் சகோதரர். இந்த உறவு காரணமாகவே அவர் இந்தக் கொலைத் திட்டத்தில் ஆழமாக ஈடுபட்டிருந்ததாக போலீஸார் கூறுகின்றனர். 

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளுக்கு எட்டு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியால் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிக்கு பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை என்ற வாதத்தை ஏற்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் 500 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அருள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! பொன்னை பாலுவுக்கு இடைக்கால ஜாமீன்..! கோர்ட் உத்தரவு..!

மருத்துவக் குழுவை நியமனம் செய்து அருளை பரிசோதித்து அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படி மேல் சிகிச்சை வழங்கலாம் என்று போலீஸ் யோசனை வழங்கியது. அப்போது, ஜாமின் தருகிறோம் என்றும் அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாவிட்டால் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. தினமும் காலை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் ஏப்ரல் பத்தாம் தேதி சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அருளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share