×
 

'3 மத்திய அமைச்சர்கள்.. 5 இணை அமைச்சர்கள்..! கோட்டை விட்ட எடப்பாடியார் - லீக்கான முக்கிய ஆடியோ!

அதிமுக கட்சியின் நிலைமை மோசமாக இருந்தது, கூட்டணி இல்லாமல் யாரும் வென்றது இல்லை என்பதால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியிடம்,அதிமுக சிறுபான்மை பிரிவு இணை செயலாளர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்த அதிமுக மே தின  கூட்டத்தில் பேசிய அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கட்சித் தலைமையை தான் வலியுறுத்தியதாக தெரிவித்திருந்தார். அவர்  கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் பொறுப்பிலும்  இருந்து கொண்டு இப்படி பேசியதால் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பின் அவசர குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் பொறுப்பில் அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகியுடன் , அப்துல் ஜப்பார் பேசும் ஆடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அதிமுகவிற்கு முஸ்லிம்கள் ஓட்டுப் போடவில்லை என்பது 100 சதவீதம் உண்மை எனவும்,பாஜக கூட்டணியில் இருந்த பொழுதும் இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை, கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை என அதில் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: என்கிட்டேயே கேள்வி கேக்குறியா? ஆத்திரத்தில் நரிக்குறவர்களை தாக்கிய அதிமுக பிரமுகர்...

எடப்பாடியுடன் மல்லுக்கு நின்ற மாஜி அமைச்சர்கள்: 

மேலும் 2021 தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நின்ற பொழுது கரும்புக்கடை பூத்தில் 1600 வாக்குகள் மட்டுமே விழுந்தது எனவும், ஆனால் திமுகவிற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் விழுந்தது என தெரிவிக்கின்றார். 2024 தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அதிமுக இல்லை எனவும், அப்போதும்   1200 ஓட்டுதான் விழுந்தது எனவும் அந்த ஆடியோவில் தெரிவிக்கிறார். மேலும் 2021 க்கு பின்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால் இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்கும் என சொன்னார்கள்.


அப்போது பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என,  எஸ்.பி.வேலுமணி முன்னணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியிடம் சண்டை போட்டார் எனவும்,
சி.வி சண்முகமும் மற்ற சிலரும் வெளிப்படையாகவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பேசினார்கள் எனவும், பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியில் வந்தவுடன், நடந்த 2024 தேர்தல் முடிவு மிக மோசமானதாக அதிமுகவிற்கு  இருந்தது எனவும் அதில் பேசுகிறார்.

அதிமுக கட்சியின் நிலைமை மோசமாக இருந்தது,கூட்டணி இல்லாமல் யாரும் வென்றது இல்லை என்பதால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்,கட்சி வலுவாகும் என்பதால் உண்மையை சொன்னேன் எனவும்,இஸ்லாமியர்கள் திமுகவிற்குதான் ஓட்டு போட்டார்கள், அவர்கள் ஓட்டை வாங்கிதான் ஸ்டாலின் முதல்வரானார், ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

கைநழுவிய ஜாக்பாட்: 


அதிமுகவின்  ஆதங்கம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான், 2024 தேர்தலில் அதிமுக -  பா.ஜ.க கூட்டணி இருந்திருந்தால் 21 மக்களவை தொகுதிகளில் வெற்றி இருக்க முடியும், அண்ணாமலை எம்.பி ஆகி இருக்க முடியும்,  3 பேர் கேபினட் மினிஸ்டர் ஆகி இருப்பார்கள் 5 பேர் இணை அமைச்சர் ஆகி இருப்பார்கள், அந்த வாய்ப்பை பா.ஜ.கவை விட்டு வெளியே வந்ததால் எடப்பாடி இழந்து விட்டார் எனவும் தெரிவிக்கின்றார். கட்சி பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் நிலை எப்படி இருக்கும் எனவும், அதனால் பா.ஜ.க கூட்டணி வேண்டும் என்று சொன்னேன் எனவும் எதிர்முனையில் பேசும் எஸ் .டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவரிடம் தெரிவிக்கின்றார்.

நான் ஐக்கிய ஜமாத் பொறுப்பாளர் என்பது சத்தியமங்கலத்தில் யாருக்கும் தெரியாது என தெரிவிக்கும் அவர்,கோவையில்  கட்சிகார இஸ்லாமியர்கள் மட்டும்தான் அதிமுகவிற்கு வாக்களித்தார்கள்,வேறு யாரும் வாக்களிக்க வில்லை எனவும் அந்த ஆடியோவில்  அப்துல்ஜப்பார் விளக்கம் அளிக்கின்றார். அவருடன் ஆடியோவில் பேசிய எஸ்டிபிஐ கட்சிக்காரர், திமுக இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை என சொல்லாதீர்கள், 
இஸ்லாமிய சமூகத்திற்கு ஸ்டாலின் இருப்பதே பாதுகாப்புதான் எனவும், அவர் எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விடாக்கண்டன் பாஜக... கொடாக்கண்டன் இ.பி.எஸ்... ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. முக்கிய முடிவு..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share