×
 

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்களே முடிவு செய்வார்கள்! ஸ்டாலினுக்கு காங்., எம்.பி பதிலடி!

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், ''கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பேசியபோது, “ஆட்சியில் பங்கு தமிழகத்துக்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனர். கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்” என்று கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையான பதில் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நமது (காங்கிரஸ்) தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூர் கடந்த காலங்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும், ஆட்சியில் பங்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஆட்சி பங்கிற்கு வாய்ப்பில்லை என தெளிவாக கூறியதால், இது காங்கிரஸ் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினின் கருத்து கூட்டணி உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கருதுகின்றன.

மாணிக்கம் தாகூரின் பதிவு மூலம் காங்கிரஸ் தரப்பு மீண்டும் சர்ச்சையை தொடங்கியுள்ளது. “மக்கள்தான் முடிவு செய்வார்கள்” என்ற அவரது கருத்து, கூட்டணி தொடர்ந்தாலும் ஆட்சி பங்கு கோரிக்கையை கைவிட மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையேயான மோதல் வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில், ஆட்சி பங்கு விவகாரம் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்பதும், திமுக அதிக இடங்களில் தனித்து போட்டியிட விரும்புவதும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் மரியாதை தரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கூட்டணி வலுவாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இந்த சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டணி உறுதியாக இருக்குமா? அல்லது பிளவு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்! கூட்டணியில் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share