×
 

போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்! கூட்டணியில் அதிர்ச்சி!

தி.மு.க.,விற்கு நம்பிக்கையான கட்சியாக இருக்க வேண்டிய காங்கிரஸ், தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடி தருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் மோதல் வெடித்துள்ளது. கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். ஆனால் அந்த சந்திப்பில் ராகுல் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் திமுகவால் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால் மத்திய பாஜக அரசின் அழுத்தம் குறையும் என சில கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின்னை மூத்த அமைச்சர்கள் சிலர் தனியாக சந்தித்து விரிவாக பேசியுள்ளனர். அப்போது அவர்கள், “திமுகவிற்கு நம்பிக்கையான கூட்டணி கட்சியாக இருக்க வேண்டிய காங்கிரஸ் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொடர் நெருக்கடி தருகிறது. 

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

அவர்களுக்கு தமிழகத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு வங்கிதான் உள்ளது. காங்கிரஸ் கூட்டணியால் தான் பாஜகவுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஐந்தாண்டு ஆட்சியில் பாஜகவின் விரோதம் வளர்ந்துள்ளது. காங்கிரஸை கழற்றிவிட்டால் அழுத்தம் குறையும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களிடம், “காங்கிரஸ் கட்சியை நாமாக வெளியேற்ற வேண்டாம். அவர்களாக வெளியேறினால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்று தெளிவாக பதிலளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரின் போக்கு ஏற்கனவே திமுக தலைமையை எரிச்சலடையச் செய்துள்ளது. ராகுல்-ஸ்டாலின் இடையேயான நட்பு காரணமாகவே காங்கிரஸ் மேலிடம் இதுவரை மவுனம் காத்து வந்தது. ஆனால் இப்போது இரு கட்சிகளும் முக்கிய முடிவெடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி குறித்த அச்சுறுத்தல் திமுகவின் தேர்தல் உத்தியில் பெரும் சவாலாக எழுந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியைத் தொடருமா அல்லது பிரியுமா என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: திமுகவுக்கு அதிகார மமதை! சும்மா விட முடியாது! எங்களுக்கு திருப்பி அடிக்க தெரியும்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share