×
 

விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பு! த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் ரெடி!

ஈரோட்டில் விஜய் முன்னிலையில், பிற கட்சிகளின் முக்கிய பிரபலங்கள் சிலர், த.வெ.க.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு: தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 18) விஜயமங்கலம் அருகே நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இதுபற்றி கூறுகையில், கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனின் வருகையை உணர்த்தும் வகையில் ஈரோடு மக்கள் சந்திப்பு நடைபெற வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, எந்த சிறு அசம்பாவிதமும் நிகழாத வகையில் கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.

மேலும், தன்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கூட்டம் அமைய வேண்டும் என்று செங்கோட்டையன் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: “விஜயை பார்க்க இவர்கள் எல்லாம் வரக்கூடாது” - ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட செங்கோட்டையன்...!

தவெகவில் இணைவதை கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைத்திருந்த செங்கோட்டையன், அதேபோல் ஈரோடு நிகழ்ச்சியிலும் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை அமைதியாக பேசி இணைக்க திட்டமிட்டுள்ளார். அவர்கள் யார் என்பது நிகழ்ச்சி நாளில்தான் வெளியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் விஜயின் முதல் பெரிய மக்கள் சந்திப்பு இதுவாகும். போலீசார் விதித்த 84 நிபந்தனைகளை ஏற்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்துள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சி கொங்கு மண்டலத்தில் தவெகவின் வலிமையை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: டிச.18ல் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடக்கும்..!! 2 மணி நேரம் தான் டைம்..!! செங்கோட்டையன் அதிரடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share