அமித் ஷா - நிதீஷ் குமார் திடீர் சந்திப்பு!! டெல்லி அரசியலில் மீண்டும் பரபரப்பு!
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை சந்தித்தார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை (டிசம்பர் 22) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பிகார் மாநில வளர்ச்சி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்புகளில் பிகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான விவகாரங்கள் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகர சங்கராந்திக்குப் பிறகு பிகார் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவரது முதல் டெல்லி பயணம் இதுவாகும்.
இதையும் படிங்க: மேடையில் அத்துமீறிய முதல்வர்!! அரசுப்பணியை உதறித்தள்ளிய பெண் டாக்டர்! பீகாரில் சர்ச்சை!
என்டிஏ கூட்டணியில் பிகாரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி நடத்தி வரும் நிதீஷ் குமார், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு கூடுதல் நிதி உதவி, திட்டங்கள் உள்ளிட்டவற்றை கோர உள்ளதாகத் தெரிகிறது.
பிகார் அரசியலில் நிதீஷ் குமாரின் செல்வாக்கு முக்கியமானது. தேசிய அளவில் என்டிஏ கூட்டணியின் முக்கியக் கூட்டாளியாக அவர் உள்ள நிலையில், இந்த டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதீஷ் குமாரின் இந்தப் பயணம் பிகார் அரசியல் மற்றும் தேசிய அளவிலான கூட்டணி உறவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 75 வயசுல முதல்வர் பண்ணுற காரியமா இது? மேடையில் பெண் டாக்டருக்கு நேர்ந்த சங்கடம்!