×
 

பாஜக 33 இடங்களில் வெற்றி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! மண்ணைக் கவ்வும் காங்கிரஸ்...!

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார். இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

தொடர்ந்து பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் பாஜக அரியணை ஏறுகிறது. இதனால் பாஜகவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. பீகார் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரும் நிலையில் 33 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 11 தொகுதிகளும் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க: நிதீஷ் ஆதரவு இல்லாமலேயே பாஜக ஆட்சி அமைக்கலாம்...! பெரும்பான்மை பெற்று அசத்தல்

ராஷ்டி ஜனதா தளம் நான்கு தொகுதியிலும் பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜன் சக்தி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. பீகார் தேர்தலில் ஏ ஐ எம் எம் கட்சி இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி கட்சியான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அடுத்து தமிழ்நாட்டிலும் வெற்றி தான்... தமிழிசை சௌந்தரராஜன் சூளுரை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share