×
 

ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!

திமுகவினர் ஒரே நாளை நிகழ்த்திய குற்றங்கள் என பட்டியலிட்டு தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

திமுகவினர் பல்வேறு குற்ற சம்பவங்களை நடத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டை வருகின்றனர். சமீபத்தில் பாலியல் குற்றங்களில் கூட திமுகவினரின் பெயர் அடிபட்டபோது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது திமுகவினர் செய்த குற்றங்களை ஒரே நாளில் நடந்த சம்பவங்களை தமிழக பாஜக பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளது. 

கேள்வி கேட்டால் அடி, வேலை கேட்டால் மோசடி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஆட்சி ஆகியவை தான் உங்கள் திராவிட மாடலா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. ஒரே நாளில் திமுகவினரால் நடந்த குற்றங்களை பட்டியலிட்டு உள்ளது. மதுரவாயல் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 10 லட்சத்தை திமுக பிரமுகர்கள் பஷீர் அஹமது, நசீர் அஹமது சுருட்டியதாக குற்றம்சாட்டியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க வசூலிக்கப்பட்ட 25 லட்ச ரூபாய் நிதியை திமுக ஊராட்சி செயலாளர் ராஜேஷ் சுருட்டியதாக குற்றசாட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசி திமுக நகரமன்றத் தலைவர் சாதிக் பாஷா தாக்க முயன்றதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: அனல் தெறிக்கும் "புதுவை" அரசியல் களம்… பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மோசமான சாலை பற்றி கேள்வி கேட்ட விளையாட்டுத் துறை ஆலோசகர் உமாபதியை ரவுடிகளை வைத்து திமுக நகரச் செயலாளர் ஸ்ரீதர் தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சென்னை திமுக அமைச்சர் நாசர், அவரது மகன் ஆசிப் ராஜா இழைத்த கொடுமைகளுக்கு நீதி கிடைக்காமல் இளம்பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. 

இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டில் சிக்கல்... உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share