எடப்பாடி 'OUT' விஜய் ‘IN' - பீகார் தேர்தல் பார்முலாவை கையில் எடுக்கும் அமித் ஷா...!
திமுக கூட்டணி விரிசல், பாஜக தலைமை மாற்றம், அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் விஜய் வருகை உள்ளிட்ட பல சுவாரசிய விஷயங்கள் இந்த தேர்தலை மாற்றி காத்திருக்கின்றன.
வர உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் இதுவரை மக்கள் பார்த்திடாத ஒன்றாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. ஏனென்றால், திமுக கூட்டணி விரிசல், பாஜக தலைமை மாற்றம், அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் விஜய் வருகை உள்ளிட்ட பல சுவாரசிய விஷயங்கள் இந்த தேர்தலை மாற்றி காத்திருக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று என்றால் கூட்டணி யார், யாருடன் வைப்பார்கள் என்பது தான்.
2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணியை விட்டு கழன்று சென்ற அதிமுகவை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதோடு, பாஜகவிலும் கணிசமான எம்.எல்.ஏ.க்களை அள்ளலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டு தான் அமித் ஷா கூட்டணியை இறுதி செய்ததாக கூறப்பட்டது.
அதிமுக - பாஜக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என அதிமுக - பாஜக தலைவர்கள் மாறி மாறி கூறி வரும் நிலையில், “குறுக்க இந்த கெளசிக் வந்தா?!” என்பது போல் இடையில் வந்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக அதிக தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக தவெகவிற்கு சில அமைச்சர் பதவிகள், அதிக தொகுதிகளுடன் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் எடப்பாடி பழனிசாமி தயார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அச்சச்சோ...! ரஜினி ரூட்டை பாலோப் பண்ண பார்க்கும் விஜய்... எடப்பாடி, அமித் ஷா தலையில் இறங்கியது இடி...!
அனைத்தையும் விட மிகப்பெரிய ட்விஸ்ட்டாக, கொள்கை எதிரியான பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால் விஜய் தங்களை புறக்கணிக்கிறார் என்றால் பாஜகவை கழட்டிவிடக்கூட எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதையே கருத்தை தான் திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுகவிற்கு எதிராக பரப்பி வருகின்றன. ஒருவேளை தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக அப்படி செய்தால் என்ன செய்வது என்பதற்காக அமித் ஷா பிளான் பியை தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அங்கு ஆளும் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, ஆளுக்கு 101 தொகுதிகளை சரி சமமாக பிரித்துக் கொண்டது. மேலும் முதலமைச்சர் பதவியையும் மீண்டும் நிதிஷ் குமாருக்கே கொடுத்துள்ளது. இதே பார்முலாவை தமிழ்நாட்டிலும் பாலோப் பண்ண அமித் ஷா திட்டமிட்டுள்ளாராம்.
தமிழகத்தில் வலுவாக உள்ள மாநில கட்சி ஒன்றுடன் கூட்டணி வைத்து, அந்த கட்சி தலைவருக்கு முதலமைச்சர் பதவியையும் கொடுத்து ஆட்சியில் அங்கம் வகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் மீது மக்கள் கவனம் திரும்பியுள்ளது. எனவே தவெகவுடன் கூட்டணி வைத்தால் அதிக சீட்கள் கிடைக்கும், முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுத்துவிட்டு துணை முதலமைச்சர் பதவியை பாஜகவிற்கு ஒதுக்கிவிடலாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை கழட்டி விடவும் பாஜக தயங்காது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...!