×
 

டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...!

தமிழ்நாட்டில் தேர்தலுக்கான கால அந்த சுற்று பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ள நிலையில் அது தொடர்பான ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளதாக முதற்கட்ட தகவலானது வெளியாகவுள்ளது. 

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை இன்று மாலை டெல்லியில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக அக்டோபர் 11ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தேர்தலுக்கான கால அந்த சுற்று பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ள நிலையில் அது தொடர்பான ஆலோசனைகளை முன்னெடுக்கவுள்ளதாக முதற்கட்ட தகவலானது வெளியாகவுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாக பாஜக உடைய மூத்த தலைவர்கள் குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்பும் ஒரு மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஒரு திட்டமிடல் என்பது தமிழ்நாடு பாஜகவின் சார்பாக வைக்கப்பட்டுள்ளது எனவும் அதன் அடிப்படையில் அந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான ஒரு அழைப்பை தலைவர்களுக்கு வழங்குவது குறித்த தொடர்பான ஒரு சந்திப்பாக இது அமையும் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அதிமுகவினுடைய தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக குழுவினுடைய அந்த ஒருங்கிணைப்பு என்பது எவ்வாறு இருக்க போகிறது என்பது குறித்தும் ஆலோசனையும் நடத்தவுள்ளார். அது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடன் இன்று டெல்லியில் நடைபெற உள்ள ஆலோசனையின் பொழுது அவர் முன்வைப்பார் என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நாளை அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மீண்டும் NDA கூட்டணியில் தினகரன்? அண்ணாமலை - TTV திடீர் சந்திப்பு...

முன்னதாக பாஜகவினுடைய தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து,  ஒருங்கிணைப்பு, கட்சியினுடைய பலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்பாக அவர் ஆலோசிக்க உள்ளது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு அழைப்பையும் அவர் இன்று நடைபெற உள்ள அந்த சந்திப்பின் பொழுது ஜேபி நட்டாவிடம் முன்வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை... TTV குறித்த கேள்விக்கு நைனார் சூசக பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share