பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!
பிரதமர் மோடியை சந்தித்தபோது வந்தே மாதரம் முதலில் பாடப்படக்கூடாது என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியது அனாவசியமானது என பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் தகவல்
தேர்தல் வெற்றிக்கு பின்னர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விஜய் சந்திக்காததன் மூலம் அதிமுகவை உடைக்கும் எண்ணம் அவருக்கு இருப்பதாகவே தோன்றுவதாகவும் குற்றச்சாட்டு
பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம், இன்று அவரது பிறந்த நாளை கட்சியினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பாரதமாதா திருவுருவப்படத்திற்கும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்
பின்னர் பாஜகவினர் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள் மற்றும் உணவை வழங்கினார்
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே பி ராமலிங்கம் கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய் சில அத்தியாவசிய தேவைகளை கேட்டிருப்பதோடு, வந்தே மாதரத்தை முதலில் பாடக்கூடாது என்பது உள்ளிட்ட அனாவசியமான விஷயத்தையும் கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!
தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்காக பாடப்படுகின்ற பாடல் அது என்பதை, அவரின் அமைச்சரவையில் இருப்பவர்களுக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார் அனைத்து தலைவர்களையும் விமர்சிக்கும் முதலமைச்சர் விஜய் யோக்கியமானவரா? என சாடிய எழுப்பிய கே பி ராமலிங்கம், பல்வேறு தலைவர்களை பார்த்தவர் ஏன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
எனவே விஜயும் ஒரு சர்க்காஸ்டிக் பிலோ என விமர்சித்த ராமலிங்கம், அதனால் முதலமைச்சர் விஜய்க்கு அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதோ இருப்பதாகவே தோன்றுகிறது என்றார். மேலும் அவர் ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சியினரை மட்டும் பார்த்தால் விமர்சிக்கப்படுவோம் என கருதி, திமுக தலைவர் மு க ஸ்டாலினையும் சென்று பார்த்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை தான் மக்கள் தற்குறி தற்குறி என கூறுகிறார்கள் என கே பி ராமலிங்கம் தெரிவித்தார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சி என்பதால் அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும், அங்குள்ளவர்களின் பதவி ஆசையால் அக்கட்சி சிதைந்து விடக்கூடாது என்பது தனது தனிப்பட்ட ஆசை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகிகள்... வெளுத்து வாங்கிய நயினார்..!!