×
 

“ஆடு நனையுதே என யாரோ கவலைப்பட்ட மாதிரி...” - உதயநிதியை நோஸ்கட் செய்த நயினார் நாகேந்திரன்...!

திமுக வேண்டுமென்றால் பாஜகவோடு கூட்டணி வைப்பார்கள் ,வேண்டாம் என்றால் விமர்சிப்பார்கள் நயினார் நாகேந்திரன் விமர்சனம்

பாஜக சார்பில் தமிழக முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது .அதன் தொடர்ச்சியாக, இன்று வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைமேடு பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது  .இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களின்  குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்பொழுது போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், மா தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்,
தொழில்நுட்ப பூங்கா அழைக்க வேண்டும், விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் அமைப்பதை கைவிட வேண்டும், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  கைத்தறிகளை ஊக்கம் அளிக்க வைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், பாஜகவின்  பி டீம்  கட்சியாக தவெக
இருப்பதாக திமுக கூறுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தவெக எங்கள் பி டீம் என ஒரு வதந்தியை பரப்புகிறார்கள். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வது போன்று கடைபிடிக்கிறது அது திமுகவின் வாடிக்கை. சேகர் பாபுவை சந்தித்து விட்டு தான் செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றார்.  அப்படி என்றால் திமுகவின் பி டீம் ஆ ? என நீங்கள் தான் கேட்க வேண்டும்.

இதையும் படிங்க: அமித் ஷா காலில் முதலில் விழுவது யார்? ... இபிஎஸ், ஓபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

பாஜகவிடம் இருந்து அதிமுகவை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என திருவண்ணாமலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு,
 ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழியை சொன்னால் நல்லா இருக்காது, ஆடு நனைகிறது என்பதற்காக யாரோ கவலைப்பட்ட மாதிரி இருக்கு.

 அதிமுக -  திமுக எதிர் எதிர் கட்சி, அண்ணா திமுகவை காப்பாற்றும் அவசியம் உங்களுக்கு என்ன வந்தது?எனக் கேள்வி எழுப்பினார். அதிமுகவுடன் பாஜக இன்றைக்கு நேற்று கூட்டணி வைக்கவில்லை. எங்களை விமர்சித்த திமுக 1999 ல் பாஜகவோடு கூட்டணி வைத்தது. 
வேண்டும் என்றால் கூட்டணி வைப்பார்கள் வேண்டாம் என்றால் விமர்சிப்பார்கள். திமுக என்றைக்காவது மக்கள் செல்வாக்கோடு தொடர்ந்து ஜெயித்து உள்ளதா? அவர்கள் எப்பொழுதும் கூட்டணியை தான் நம்பியுள்ளார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: உயிரற்று கிடக்கும் உயர்கல்வித் துறை...! திராவிட மாடல் வெட்கப்படனும்...! நயினார் விமர்சனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share