×
 

அமித் ஷா காலில் முதலில் விழுவது யார்? ... இபிஎஸ், ஓபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

பாஜக அதிமுக கூட்டணி அமைந்து 8 மாதம் காலம் ஆகியும் இதுவரையில் எந்த கட்சியும் அந்த கூட்டணியை நம்பி போகவில்லை என துணை முதலமைச்சர் சாடல்

தனி தனியாக பிரிந்துள்ள அதிமுக அணிக்குள் உள்ள ஓற்றுமை அமித் ஷாவை யார் அதிகமாக பாராட்டுவது என்பது தான் என ஆரணியில் கலைஞர் கருணாநிதி சிலை திறந்து வைத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அவுசிங் போர்டு அருகில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவரும் கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கும் நிகழ்ச்சி பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் ஆரணி எம்.பி. தரணிவேந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

மேலும் ஆரணி மாநகருக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை பட்டன் அழுத்தி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!

இதனையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது : அதிமுக கட்சியை யார் கைப்பற்றுவது என்பது அவர்களுக்குள் போட்டியாக உள்ளன. எடப்பாடியை எப்படி தோற்கடிப்பது அதிமுக அணிக்குள் வேலை பார்த்து வருகின்றனர். எடப்பாடி அதிமுக கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார்.

அமித் ஷாவின் காலடியில் யார் முதலில் விழுவது என அதிமுக அணிக்குள் மிகப்பெரிய போட்டியே நிலவி வருகின்றன. ஆனால் பாசிச பாஜகவையும் அடிமை அதிமுகவையும் தமிழக மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். வெறுப்பு அரசியல் மட்டுமே செய்யும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்து 8 மாதம் காலம் ஆகியும் இதுவரையில் எந்த கட்சியும் அந்த கூட்டணி நம்பி போகவில்லை அதில் உள்ளவர்கள் மட்டும் ஒருவருக்கொருவர் பிச்சிகொண்டு செல்கின்றனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமி 8மாதம் முன்பு பிரச்சாரத்திற்கு செல்வதாக சொல்லி ஓரு பஸ்ஸை எடுத்து கொண்டு கிளம்பினார். ஓவ்வொரு தொகுதியாக போய் பிரச்சாரம் செய்வார் என்று பார்த்தால், தேனி பக்கம் போனால் ஓ.பி.எஸ் திட்டுவார். கோபி போனால் செங்கோட்டையன் திட்டுவார். டெல்டா மாவட்டம்சென்றால் டிடிவியை திட்டுவார் இப்படிதான் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் சென்று கொண்டிருக்கின்றார்.

ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தான் அதிமுக அணிக்குள் ஓற்றுமை உள்ளது.  அமித் ஷாவை அதிகமாக பாராட்டி பேசுவது அதிமுகவில் உள்ள ஓற்றுமை.சொந்த கட்சி காரனை திட்டிட்டு அமித் ஷாவின் காலை பிடித்து கொண்டு புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றனர் என அதிமுகவை சகட்டுமேனிக்கு சாடினார்.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏக்கள் அம்பேத்குமார், ஜோதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share