×
 

NDA கூட்டணிக்குள் மீண்டும் டிடிவி தினகரன், ஓபிஎஸ்... நயினார் நாகேந்திரன் சொன்ன 'நறுக்' அப்டேட்...!

நான் தேர்தலில் வெற்றி பெறுவனா தோல்வியடைவனா என்று சேகர்பாபு முடிவு செய்ய முடியாது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

அதிமுக பிளவு படவில்லை ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார். அதிமுக கட்சியில் இருந்து தான் செங்கோட்டையன் வெளியேறியுள்ளார், டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் வருவார்களா என்பதை காலம்தான் முடிவு செய்யும்

புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

சேகர்பாபு எனது நண்பர் அவர் சொன்னது உண்மைதான். பாஜகவில் மூன்று ஆண்டுகள் தான் பதவி. அமைச்சர் சேகர்பாபு இருப்பது திமுக எங்களது கட்சியை பற்றி அவர் சொல்ல அவசியம் என்ன இருக்கிறது. எனது நெருங்கிய நண்பர் சேகர்பாபு நான் கோயிலுக்கு எதையாவது கேட்டால் செய்து கொடுப்பார். அவரே முதலமைச்சர் நான் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க சொன்னார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!

நான் தேர்தலில் வெற்றி பெறுவனா தோல்வியடைவனா என்று சேகர்பாபு முடிவு செய்ய முடியாது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

திமுக பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் அவருடைய கருத்தை சொல்லியுள்ளார். நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது தேர்தலில் நிரந்தர நண்பரும் நிரந்தர எதிரியும் கிடையாது. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக பெரிய வார்த்தைகள் பேசணுமா என்பது அவர்தான் முடிவு செய்ய வேண்டும். 

நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை தவெத ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. இதுவரை நாகரீகமாகத்தான் பேசி வருகிறோம் இனிமே நாகரிகமா தான் பேசுவோம். தவெகவை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.... 

எஸ் ஐ யாருக்கு எதிராக கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை அப்படி இருக்கையில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்வர்களா இல்லையா என்பது அவர்களுக்கு தான் தெரியும் காலம் பதில் சொல்லும். 

எஸ் ஐ ஆர் தொடர்பாக முதலமைச்சர் எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று கூறினார் அவருக்கு நான் பதில் கூறுகிறேன் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் போது மட்டுமே அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் அரசு அதிகாரிகள் இருப்பார்கள் அதன் பிறகு மாநில அரசு கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருப்பார்கள்.

வருமானவரித்துறை அமலாக்கத்துறை தேர்தல் ஆணையம் இதையெல்லாம் சுயேட்சையாக செயல்படக்கூடிய ஒன்று. தமிழ்நாட்டில் நான்காண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி தான் இருந்தார். நாங்கள் அதனை எல்லாம் கண்ட்ரோலில் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் நாங்கள் நிறைய இடம் வெற்றி வெற்றி பெற்றிருப்போம் தானே.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று நான் கூறுகிறேன் எதற்காக மூன்று பேரை மட்டும் அவர்கள் சூட்டு பிடித்துள்ளனர். இதனால்  அடையாள அணி வகுப்பில் பிரச்சினை வரும்.

பாஜக ஒரு குடும்ப கட்சி கிடையாது எனக்கு பதவி காலம் மூன்று ஆண்டு காலம் தான் அதற்குள்ளாகவே வேறு தலைவர் மாற்றப்படலாம் தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

தமிழ்நாட்டில் என் டி ஏ கூட்டணிக்கு நான் தான் தலைவர் என்று எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவே கூறிவிட்டு சென்றுவிட்டார் 

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் என்னென்ன கூறினார்கள் அதையெல்லாம் செய்தார்களா 
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தே ஒரே கையெழுத்தில் நீட் ரத்து செய்வோம் என்று பொய் கூறினர். 

அதிமுக பிளவு படவில்லை ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார். அதிமுக கட்சியில் இருந்து தான் செங்கோட்டையன் வெளியேறியுள்ளார், டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் வருவார்களா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... ஒரே நேரத்தில் 3 அமைச்சர்கள் வீடுகளுக்கு பறந்த போலீஸ் படை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share