×
 

"சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே மிஞ்சும்" - நயினார் நாகேந்திரன் சாடல்...!

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்வியே மிஞ்சுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் ஆதீனத்தை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆதீனம் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன். மதுரை ஆதீனம் எனது மாவட்டத்துக்காரர் ஊர்க்காரர் அதன் அடிப்படையில் அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளேன்.

பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை சொன்னது ஒன்று செய்வது ஒன்று. நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் எடுப்போம் என்று சொன்னார்கள். திமுக தேர்தலுக்கான அரசு.

இதையும் படிங்க: தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அதிமுக - பாஜக கூட்டணிக்கு பின்னடைவா? - நயினார் கொடுத்த ரியாக்‌ஷன்...!

சிலிண்டர் விலை குறைப்போம் என்று சொன்னார்கள் குறைத்தார்களா. ஆனால் தமிழக முழுவதும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.

திமுக vs தவெக போட்டியென சொல்கிறார்களே என கேட்ட கேள்விக்கு, இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் ஒரு கவுன்சிலர் கூட இல்லை அது எப்படி போட்டியாகும்? என்றார்.

அதிமுகவில் என்ன நிலை இருந்தாலும் எடப்பாடி தலைமையில் தான் எங்கள் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் வெறும் கண்துடைப்பு தான். தவெகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு தோல்வி தான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைக்கும்.

டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்?. அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார். என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

இதையும் படிங்க: “உடனே புறப்பட்டு வாங்க...” - அமித் ஷாவிடம் இருந்து வந்த அழைப்பு... திடீரென நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share