தமிழகத்தில் பாஜக கூட்டணி வியூகம்: நாளை சென்னை வருகிறார் பி.எல். சந்தோஷ்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக மேலிடத் தலைவர் பி.எல். சந்தோஷ் நாளை சென்னை வருகிறார்; அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்க 'NDA ஒருங்கிணைப்புக் குழு' விரைவில் அமைக்கப்பட உள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காகவும், பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவும் அகில இந்திய பாஜக அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் நாளை சென்னை வருகிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலானக் கூட்டணியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிப்பதற்கான அதிரடித் திட்டங்களை பாஜக மேலிடம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாளை சென்னை கமலாலயத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பி.எல். சந்தோஷ் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த வருகையின் மிக முக்கியமான அம்சமாக, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒரு "NDA ஒருங்கிணைப்பு கமிட்டி" (NDA Coordination Committee) அமைக்கப்பட உள்ளது. இந்தச் சிறப்புப் பணிக் குழுவின் நோக்கம் மற்றும் கட்டமைப்பு குறித்து கூறியாதவது,
இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
அதிமுக உள்ளிட்டக் கூட்டணியில் உள்ள ஒவ்வொருக் கட்சியிலிருந்தும் தலா இரண்டுப் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறிகளைத் தீர்ப்பது, எந்தெந்தத் தொகுதிகளில் யார் போட்டியிட வேண்டும் என்பதை இறுதி செய்வது மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே களப்பணியில் ஒருமித்தக் கருத்தை உருவாக்குவது போன்றப் பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும்.
பி.எல். சந்தோஷின் நாளை ஆலோசனையின் போது இந்தக் குழுவின் உறுப்பினர்கள் இறுதி செய்யப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பி.எல். சந்தோஷின் இந்த வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறியக் கட்சிகளுடனானத் தொகுதி உடன்பாடுகளை விரைந்து முடித்துவிட்டு, முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!” மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!