×
 

மோடி தமிழகம் வரட்டும்?! அப்புறம் பேசிக்கலாம்? கூட்டணி ஆட்சியா? நயினார் நாகேந்திரன் சூசகம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பாஜகவில் இருந்து சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வலுவான இடத்தைப் பிடிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடுக்கிடும் கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் பாஜக தேர்தல் பணிமனையை திறந்து வைத்து பேசிய அவர், "தேர்தலுக்குப் பின் பாஜகவில் இருந்து 20-30 பேர் எம்எல்ஏக்களாக வருவார்கள். சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள். அமைச்சராக வர வி.பி. துரைசாமி ஆசிர்வாதம் வாங்கிவிட்டார். இறைவன் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும்" என்று உற்சாகமாகக் கூறினார்.

இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில், பாஜக தலைவரின் இந்த பேச்சு கூட்டணியில் உள்ள உறவுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

நயினார் நாகேந்திரன் மேலும், "பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகே அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். காங்கிரஸ் போல கூட்டணி ஆட்சி என்று பிடிவாதம் காட்டவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: சென்னையை கைப்பற்ற மோடி போட்ட ஸ்கெட்ச்! களமிறங்கும் பாஜக படை! இது கேரளா ஃபார்முலா!

பிரதமர் மோடியின் வருகைக்குப் பின் (மார்ச் 1-ம் தேதி மதுரை) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என்பது உறுதியாகியுள்ளது. NDA கூட்டணியில் அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், PMK உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வலுவான போட்டியை ஏற்படுத்துவதாகவும் நயினார் வலியுறுத்தினார். "தமிழகத்துக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க NDA-வில் சரியான ஒருங்கிணைப்பு தேவை" என்று அவர் கூறினார்.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த நயினார், "சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாணவர்கள் புத்தகப் பையில் கஞ்சா, பீர் பாட்டில்களை சுமக்கிறார்கள். அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள். நிரந்தர DGP கூட நியமிக்க முடியவில்லை" என்று குற்றம்சாட்டினார். திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேறாததால் மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பேச்சு NDA கூட்டணியில் உள்ள அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தன்னை சமமான பங்காளியாக காட்ட முயல்வதாகவும், 20-30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 2026 தேர்தலில் தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என பாஜக தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. மோடியின் வருகைக்குப் பின் தொகுதி பங்கீடு இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சு! பிரச்னை இன்றோடு முடிந்தது? அண்ணாமலை விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share