ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!
முன்னாள் அமைச்சரும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான வளர்மதியின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த பெண் தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் தமிழக அரசியலில் நீண்டகாலமாக அறியப்படுபவர் பா. வளர்மதி. இளம் வயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்ட வளர்மதி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். கட்சியின் பேச்சாளராகவும், பின்னர் மகளிரணி செயலராகவும் பொறுப்பேற்று, பெண்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தியவர் என்ற பெயரைப் பெற்றார்.
அவரது அரசியல் பயணம் 1980களின் தொடக்கத்தில் தொடங்கியது. 1984ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2001ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியிலும், 2011ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ச்சியாகப் பங்களித்தார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுகளில் இரு முறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். முதலில் 2001 முதல் 2004 வரை சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து உணவுத் திட்டத் துறை அமைச்சராகவும், பின்னர் 2004 முதல் 2006 வரை கிராமப்புறத் தொழில்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2011ஆம் ஆண்டு மீண்டும் சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, 2016 வரை தொடர்ந்தார். 2021 ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
இதையும் படிங்க: "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!
2026 சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார் வளர்மதி. நேற்றைய தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தது. இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் தாக்கம் முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் பாலசுப்ரமணியம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. வாக்குப்பதிவு நாளில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் மறியலில் ஈடுபட்டபோது அதனை தடுத்த காவலரை ஆபாசமாக பேசி தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சாத்தான்குளம் வழக்கு... தூக்கு தண்டனையா..? ஏப். 6ல் வெளியாகிறது விபரம்..!!