சொந்தக் காசில் சூனியம் வைச்சிக்கிட்ட விசிலடிச்சான் குஞ்சுகள்.. தவெகவுக்கு போலீஸ் வைத்த ஆப்பு...!
போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கடலூர் தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமாரின் குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார்.
இதற்காக கடலூர் ஆல்பேட்டை முதல் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட பேனர்களும் மற்றும் கொடிகள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதற்காக காவல்துறையில் எந்த அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டதால் கடலூர் புதுநகர் போலீசார் இதுகுறித்து தற்பொழுது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பயணங்களுக்கு தனி விமானத்தை பயன்படுத்தும் விஜய்.. தலை சுற்ற வைக்கும் அதன் வாடகை!!
தவெக தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் புது நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒர்க் ஃப்ரம் ஃபீல்ட்.. கொடைக்கானலிலும் ரோடு ஷோ.. தெறிக்கவிடும் விஜய்.!!