பயணங்களுக்கு தனி விமானத்தை பயன்படுத்தும் விஜய்... தலை சுற்ற வைக்கும் அதன் வாடகை!!
தவெக தலைவர் விஜய் அண்மையில்ரும் பயன்படுத்தி வரும் தனி விமானம் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வேலைகளில் விஜய் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் விஜய், தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுவாகும்.
இதையும் படிங்க: ஒர்க் ஃப்ரம் ஃபீல்ட்.. கொடைக்கானலிலும் ரோடு ஷோ.. தெறிக்கவிடும் விஜய்.!!
விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு முழு வீச்சாக அரசியலில் களம் காணப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அண்மையில் தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்ற விஜய், ரோடு ஷோவும் நடத்தினர். இதனிடையே விஜய் தனது வெளியூர் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து கோவைக்கு பல கமர்ஷியல் விமானங்கள் இருந்தாலும் விஜய் தனது பிரைவேட் ஜெட்டில் சென்றார். அதேபோல, மதுரைக்கும் தனி விமானத்திலேயே சென்றார். விஜய் பயணம் செய்யும் இந்த தனி விமானத்தின் விலை மட்டும் கிட்டதட்ட ரூ.8 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஒருநாள் பயன்படுத்த ரூ.14 லட்சம் வரை வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரைவேட் ஜெட்டில் அதி நவீன வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் புகழ் பாடிய வைஷ்ணவி தவெகவிலிருந்து விலகல்.. கட்சியில் ஈகோ மோதல்.? வெளங்கிடும் விஜய் கட்சி!