×
 

இறுக்கமான முகத்துடன் சென்னை திரும்பிய விஜய்!! முடிந்தது முதற்கட்ட விசாரணை!! வெளியான முக்கிய தகவல்!

சிபிஐ அதிகாரிகள் கேட்ட முக்கிய கேள்விகள் விவரமும், விஜய் என்ன பதில் அளித்தார் என்ற விவரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெருந்திரளான நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, நேற்று டில்லியில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தியது.

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர். கூட்டத்திற்கு வரும் மக்கள் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தெரியுமா, 10,000 பேர் வருவார்கள் என்று எந்த அடிப்படையில் காவல்துறைக்கு தெரிவித்தீர்கள், கூட்டம் அதிகமாக இருப்பதை அறிந்தும் ஏன் தாமதமாக வந்தீர்கள், வாகனத்திலிருந்து இறங்கியது ஏன், முன்கூட்டியே சமூக வலைதளத்தில் பதிவிட்டது ஏன், சம்பவ இடத்திலிருந்து உங்களை யார் வெளியேற்றினார் போன்ற பல கேள்விகள் அடுக்கடுக்காகக் கேட்கப்பட்டன.

இதற்கு விஜய் அளித்த பதில்களில் குறிப்பிடத்தக்கது, “நிலைமை விபரீதமாக மாறுவதை உணர்ந்ததும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கேயே தொடர்ந்து நின்றிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்” என்பதாகும். இந்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்! விஜய் டிரைவரிடம் 8 மணி நேரம் விசாரணை! சிபிஐ முன்வைத்த கிடுக்குப்பிடி கேள்விகள்!

அதேநேரம் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் பொதுவாக பல ஆயிரக்கணக்கானோர் திரள்வது தெரிந்திருந்தும், கரூர் கூட்டத்திற்கு 500 போலீசார் மட்டுமே ஏன் பணியமர்த்தப்பட்டனர்?

கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்ததை அறிந்த பிறகு போலீஸ் சார்பில் என்னென்ன கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? அசம்பாவிதங்கள் தவிர்க்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? என்பன உள்ளிட்ட கேள்விகள் அடங்கும்.

நேற்றைய விசாரணைக்குப் பிறகு விஜய் டில்லியில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் தங்கினார். பாதுகாப்பு கருதி ஹோட்டல் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை அவர் தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

இன்றும் விஜயிடம் விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகை காரணமாக பிறகு ஆஜராக அனுமதி கோரப்பட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ விசாரணை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் டிரைவரிடம் விசாரணை!! பிரசார வாகனத்தில் சோதனை!! இறுக்குப்பிடிக்கும் சிபிஐ அதிகாரிகள்!! தப்புமா தவெக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share