அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிடவில்லை! சென்னை ஐகோர்ட் விளக்கம்!
அமைச்சர் கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் விளக்கம் அளித்துளளது.
சென்னை உயர் நீதிமன்றம், நகராட்சி நிர்வாகத் துறையில் பெரும் லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்பு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என்று கூறி இன்பதுரை, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!
இதே நேரத்தில், அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்கு மட்டுமே பதிய உத்தரவிடப்பட்டது” என்று தெளிவுபடுத்தினர்.
மேலும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுவதால், விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 4-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர். நேரு தரப்பில் கோரியபடி, தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இந்த வழக்கு தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமைச்சர் கே.என்.நேரு மீதான லஞ்சப் புகார் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப் போராட்டம், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!