×
 

ஷேர் ஆட்டோவில் பாலியல் தொல்லை!! மாணவியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிய டிரைவர்! சென்னையில் பகீர்!

ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை வேகமாக எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவிக்கு ஓடும் ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து போலீஸார் தெரிவித்த தகவலின்படி, சென்னை மணலி பெரிய மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 61) என்ற ஆட்டோ டிரைவர், திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் காலை 8 மணியளவில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவி ஆட்டோவில் ஏறினாள்.

பின்னால் மூன்று பெரியவர்கள் உட்கார்ந்திருந்த நிலையில், சண்முகம் மாணவியிடம் “நீ என் பக்கத்தில் வந்து உட்காரும்மா” என்று கூற, அப்பாவியாக மாணவி அவரது அருகில் உட்கார்ந்தாள். ஆனால் அதன் பிறகு ஆட்டோவில் வேறு யாரும் ஏறவில்லை. தனியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சண்முகம் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது... தூதரக நடவடிக்கை தேவை... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதும் ஆத்திரமடைந்த சண்முகம், ஓடும் ஆட்டோவிலிருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.

கீழே விழுந்த மாணவியை அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்களும், சில வாகன ஓட்டிகளும் ஓடிச் சென்று தூக்கி எழுப்பினர். முதலுதவி செய்து, நடந்த சம்பவத்தை அறிந்து உடனடியாக மாணவியின் பெற்றோருக்கும், திருவொற்றியூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அருகிலுள்ள கடைகளின் சிசிடிவி கேமராக்களை சரிபார்த்து ஆட்டோ எண்ணை ட்ரேஸ் செய்தனர். ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்தனர்.

நேற்றிரவு திருவொற்றியூர் கடற்கரை சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மறைவான இடத்தில் பதுங்கியிருந்த சண்முகத்தை இன்ஸ்பெக்டர் ரஜினிஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

போலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது சண்முகம் போலீசாரை தள்ளிவிட்டு கடற்கரையை நோக்கி ஓடினார். பாறாங்கற்கள் மீது ஓடும்போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கை முறிந்தது. காயமடைந்த அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து மாவு கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர்.

போலீசார் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமிக்கு ஓடும் ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுத்த இந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதி மக்களை மிகுந்த கோபத்துக்கும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. மாணவிக்கு நீதி வழங்கி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் கூச்சலிட்டும் கொடூரத்தை நிறுத்தாத திமுக நிர்வாகி!! தீயாய் பரவும் வீடியோ!! அண்ணாமலை உடைத்த பகீர் உண்மை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share