தலைநகரை குலை நடுக்கவிட்ட ‘கொலைகள்’... விடிய விடிய வேட்டையாடிய காவல்துறை... கொத்து, கொத்தாய் சிக்கிய ரவுடிகள்...!
சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை குறிவைத்தே இந்த ஸ்பெஷல் டிரைவ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் ரவுடிகளை குறிவைத்து போலீசார் ஸ்பெஷல் டிரைவ் மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூர் மற்றும் பெசன்ட் நகர் கொலை சம்பவங்களின் எதிரொலியாக இந்த ஸ்பெஷல் டிரைவ் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கடந்த ஒரு வாரத்தில் சென்னை பெசன்ட் நகர் மற்றும் திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக இரண்டு படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
சென்னையில் குறிப்பாக பெசன்ட் நகரில் தவெக நிர்வாகியான வண்ணாந்துறை கண்ணன், அதேபோன்று திருவொற்றியூரில் பிரதீப்ராஜ் என்பவரும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!
இந்த சம்பவங்கள் சென்னையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், சட்டம்-ஒழுங்கு தொடர்பாகவும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளன. இதன் எதிரொலியாக தற்போது சென்னை காவல்துறையினர் ஸ்பெஷல் டிரைவ் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை குறிவைத்தே இந்த ஸ்பெஷல் டிரைவ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஏ-கேட்டகிரி, பி.சி. உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள ரவுடிகளை நேற்று இரவு முதலே போலீசார் சோதனை செய்து, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாநகரில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் ரவுடிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நுண்ணறிவுப் பிரிவு போலீசார் சார்பில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, குறிப்பிட்ட ரவுடிகளுக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் மாறி மாறி தாக்குதல் நடத்தும் சம்பவம் நிகழ வாய்ப்புள்ளதாக ஏற்கனவே நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கும்.
அதுபோன்ற ரவுடிகளை தற்போது கைது செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறையில் ஒரு கேங்ஸ்டர் டீமும் செயல்பட்டு வருகிறது. அவர்களும் சிறையில் இருந்து வெளியே வரும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலும், கேட்டகிரி வாரியாக பிரிக்கப்பட்டுள்ள ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்பெஷல் டிரைவ் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 100-க்கும் மேற்பட்டதாக உயர வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!