×
 

ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்துள்ளது. ஆகாஷ் கல்லூரியில் படித்து வந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர், பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆகாஷ் கூலி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நெல்லையில் காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... மருமகனை வீடு புகுந்து சல்லி, சல்லியாக வெட்டிய சாதிவெறி மாமனார்...!

இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் ஆகாஷ் தனது மனைவியுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, மேலஅரியநாயகிபுரத்தில் இருந்து சுஷ்மிதாவின் தந்தை முருகன் இருசக்கர வாகனத்தில் சிவகாமிபுரத்திற்கு வந்துள்ளார்.

வீட்டின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்ற முருகன், தனது மருமகன் மற்றும் மகள் இருவரையும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருமகன் மற்றும் மகளை வெட்டிவிட்டு தப்பியோடிய முருகனை தனிப்படை அமைத்து தேடி வந்த பாவூ ர் சத்திரம் போலீசார் முக்கூடல் பகுதியில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

இதையும் படிங்க: பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share