×
 
☰

“இனி எவனாவது இப்படி பேனர் வச்சா?...” - காங்கிரஸ் கட்சியினர் ஆவேச எச்சரிக்கை... சிதம்பரத்தில் நடந்தது என்ன?

டலூர் தெற்கு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், நகரத் தலைவர் தில்லை மக்கீன் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவிக்க வந்தனர்.

சிதம்பரத்தில் காமராஜர் சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன பிளக்ஸ் பேனர்கள். சிலைக்கு  மாலை அணிவிக்க வந்த காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை பிடுங்கி எறிந்து விட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. இனி காமராஜர் சிலையை மறைத்து யாரேனும் பேனர் வைத்தால் சாலை மறியல் செய்வோம், பேனரை பிடுங்கி எறிவோம் என எச்சரிக்கை

முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சிதம்பரம் கீழவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் வந்தனர். அக்கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், நகரத் தலைவர் தில்லை மக்கீன் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது காமராஜர் சிலையை மறைத்து தனியார் நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதன் காரணமாக காமராஜரின் சிலை முழுவதுமாக தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்த பேனர்களை பிரித்து எறிந்தனர்.

இதையும் படிங்க: SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!

பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காமராஜர் புகழ் ஓங்குக என முழக்கமிட்டனர். அப்போது பேசிய சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தில்லை மக்கீன், இனி எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், வணிக நிறுவனங்களாக இருந்தாலும் இங்குள்ள காமராஜர் சிலையை மறைத்து பேனர் வைக்கக்கூடாது. அப்படி பேனர் வைத்தால் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த இடத்தில் சாலை மறியல் செய்வோம்.

அந்த பேனரை நாங்களே பிரித்து எறிவோம். இதற்காக எந்த வழக்கு வந்தாலும் நாங்கள் சந்திப்போம் என்றனர். எனவே மாவட்ட, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இங்கு யாரும் பேனர் வைக்கக் கூடாது என தெரிவித்துக் கொள்கிறோம். இனி யார் பேனர் வைத்தாலும் பிரித்து எறிவோம் என கூறினார்.

இதையும் படிங்க: சென்னைக்கு படை எடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி! பலத்தை காட்ட தயாராகும் பாஜக - காங்.,!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share