×
 

நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும்!! ஒரே மேடையில் தவெக - காங்., நிர்வாகிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழகத்தில் ஏற்படப்போகும் பிரம்மாண்ட மாற்றத்திற்கு திருப்புமுனையாக அமையும் நிகழ்வு. நாம் இணைந்திருக்கிறோம், இணைப்பு பலப்படும், நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க., தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் (த.வெ.க.) இணைந்து செயல்படலாம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகர் திருச்சி வேலுசாமி, கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் உள்ளிட்டோரும், த.வெ.க.வின் மூத்த நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: அன்றும், இன்றும், என்றும் எங்கள் வாத்தியார்! எம்.ஜி.ஆர். நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

விழாவின் அழைப்பிதழில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் விழாவை புறக்கணித்துள்ளனர். இதனால், கட்சி உட்கட்சி பூசல்கள் இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

விழாவில் பேசிய திருச்சி வேலுசாமி, ஏசு பிறப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். பாவப்பட்டவர்களை ரட்சிக்கவும், ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றவும் ஏசு தோன்றினார் என்று கூறினார். பாவிகளின் ரட்சிப்பு, ஏழைகளின் வாழ்வு உயர்வு போன்ற எண்ணம் கொண்டோர் மட்டுமே இங்கு கூடியுள்ளோம் என்று தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் ஏற்படப்போகும் பிரம்மாண்ட மாற்றத்துக்கு இந்த நிகழ்வு திருப்புமுனையாக அமையும் என்று கூறினார். இதற்கு பின்னணியை நீங்களே புரிந்துகொள்ளுங்கள், புரிந்தவர்கள் கைதட்டுவார்கள் என்று சூசகமாக பேசினார். நாம் இணைந்திருக்கிறோம், இணைப்பு பலப்படும், நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பேச்சு, காங்கிரஸ் - த.வெ.க. இடையேயான சாத்தியமான கூட்டணியை சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த சில நாட்களாக இரு கட்சி நிர்வாகிகளும் சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஒருபுறம் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: அதிமுகவை அதளபாதளத்தில் தள்ளிவிட்டார் இபிஎஸ்! அவரின் பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு! ஓபிஎஸ் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share