சிகரெட் பதுக்கல்!! வரி உயர்வுக்கு முன்னே பதுக்கல்!! இப்போ தாறுமாறாக எகிறும் விலை! அதிகரிக்கும் டிமாண்ட்!!
பிப்., 1ல் விலை உயர்வுக்கு வரவுள்ளதால், மொத்த வியாபாரிகள் பதுக்க தொடங்கி, குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கலால் திருத்த மசோதா காரணமாக சிகரெட் மீதான வரி கணிசமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த மசோதா ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதன்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு 2,050 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது.
முன்பு இது 200 முதல் 735 ரூபாய் வரை மட்டுமே இருந்தது. மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வு அமலுக்கு வர இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், சந்தையில் ஏற்கனவே சிகரெட் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. மொத்த வியாபாரிகள் பதுக்கலைத் தொடங்கி விட்டதால், சில்லறை விற்பனைக்கு மிகக் குறைந்த அளவு சிகரெட்டுகளை மட்டுமே அனுப்பி வருகின்றனர். இதனால் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு முன்கூட்டியே நடந்து விட்டது.
இதையும் படிங்க: #BREAKING: சென்னை திரும்பினார் விஜய்..! சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது? தவெக விளக்கம்..!
சில்லறை வியாபாரிகள் கூறுகையில், “மொத்த வியாபாரிகளிடம் 50 பாக்கெட் கேட்டால் 25 பாக்கெட் மட்டுமே தருகின்றனர். அதேபோல் 5 பாக்கெட் கேட்கும் எங்களுக்கு ஒரு பாக்கெட் மட்டுமே கொடுக்கின்றனர். இதனால்தான் விலை உயர்ந்து விட்டது” என்றனர்.
தற்போது பல பிரபல பிராண்டுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்டு பில்டர் ஒரு பாக்கெட் 91 ரூபாயில் இருந்து 107 ரூபாயாகவும், கிங்க்ஸ் 155 ரூபாயில் இருந்து 190 ரூபாயாகவும், சிசர்ஸ் 75 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், மினி கோல்டு 56 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், இன்டிமின்ட் 87 ரூபாயில் இருந்து 107 ரூபாயாகவும், ஸ்டெல்லர் மற்றும் டோட்டல் 56 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
தனி சிகரெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளது. கிங்க்ஸ் ஒரு சிகரெட் 19 ரூபாயில் இருந்து 22 ரூபாயாகவும், சிசர்ஸ் 9 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும், மினி கோல்டு, ஸ்டெல்லர், டோட்டல் ஆகியவை 7 ரூபாயில் இருந்து 8 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன. மற்ற பல சிகரெட்டுகள் ஒவ்வொன்றும் 1 முதல் 3 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன.
பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடு காரணமாக, பிப்ரவரி 1-ஆம் தேதி அமலாக வேண்டிய விலை உயர்வு, இரண்டு வாரங்களுக்கு முன்பே நடந்து விட்டது. இதனால் சிகரெட் புகைப்பவர்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலயா.. நாளைக்கும் இருக்கு..!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!