சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!
கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருவதாகவும் கூறினார்.
இன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண்ணான புதுச்சேரியில் இருந்து, தமிழர் உணர்வுகளை பாதிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக திமுக கூட்டணிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எண்ணம் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைவதே எனவும், டெல்லியின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசுகளை மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். அதே மனநிலை புதுச்சேரி மக்களிடமும் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணியை தோற்கடித்து, புதுச்சேரியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர திமுக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். புதுச்சேரி பல சிறந்த அரசியல் தலைவர்களை உருவாக்கிய மண் என்றும், ஆனால் தற்போதைய ஆட்சி அதன் பாரம்பரிய பெருமையை பாதித்துள்ளதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: உதயசூரியன் உதித்ததும் சூறாவளியாய் கிளம்பிய சி.எம். ஸ்டாலின்... வாக்கிங்கில் வாக்கு வேட்டை...!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், ஒன்றிய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். இந்நிலையால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான அதிகாரம் இல்லாமல், ஆளுநர் மூலம் நிர்வாகம் நடைபெறுகிறது என்றும் கூறினார்.
வரும் ஏப்ரல் 9ஆம் தேதி புதுச்சேரியின் புதிய அரசியல் மாற்றத்திற்கான நாளாக அமைய வேண்டும் என்றும், ஜனநாயகத்தையும் மக்களாட்சியையும் காக்கும் பொறுப்பு மக்களிடமே இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தாய்மொழி மற்றும் தமிழ் அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டு, கல்வி துறையில் தாய்மொழி புறக்கணிக்கப்படுவது கவலைக்குரியது என்றும் தெரிவித்தார். தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: நிறுத்துங்க சார்...!! - மு.க.ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்... முதல்வர் வாகனத்திற்குள் அதிரடி சோதனை...!