கண்ணீர் விடாத கொடுமையாய் புலம்பிய உ.பி.க்கள்.. திமுக அமைச்சர்களுக்கு பறந்த கட் அண்ட் கறார் உத்தரவு!
2026 தேர்தலை குறிவைத்து திமுகவில் வேலைகள் வேகமெடுத்துள்ளன மாவட்டவாரியாக இருக்கும் சிக்கல்களுக்கு முடிவு கட்டி கட்சியினரை தேர்தல் பணிகளில் ஆக்டிவவாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆளுங்கட்சி என யார் இருந்தாலும் அந்த கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம் சில சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். அரசியலில் இது காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. இதில் கான்ட்ராக்ட் மட்டும் கிடையாது, அரசு சார்ந்த சின்ன, சின்ன வேலைகளில் கட்சிக்காரர்களுக்கு வேலை போட்டு கொடுப்பதும் அடங்கும்.
ஆனால் திமுக ஆட்சியில் இருந்தாலும் தங்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை என திமுக மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் புலம்பி வந்துள்ளனர். குறிப்பாக, 2026 தேர்தலை குறிவைத்து திமுகவில் வேலைகள் வேகமெடுத்துள்ளன மாவட்டவாரியாக இருக்கும் சிக்கல்களுக்கு முடிவு கட்டி கட்சியினரை தேர்தல் பணிகளில் ஆக்டிவவாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அந்த வகையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே மூன்றாம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதில் தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட போது கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இருக்கும் ஒரு அதிருப்தியை கவனத்துக்கு கொண்டு வந்தார் ஸ்டாலின். அதாவது திமுக ஆட்சியில் இருக்கும் போது கூட கட்சிக்காரர்களுக்கு எந்த பதவியோ வேலை வாய்ப்போ கிடைப்பதில்லை என்ற குறை இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சை...! திமுக நிகழ்ச்சிகாக பயன்படுத்தப்பட்ட அரசு பேருந்துகள்...!
கட்சிக்காக உழைக்கும் எங்களையும் கவனத்தில் வைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் கோரிக்கை வைத்தும், எந்த முன்னேற்றமும் இல்லை என்று புலம்பி வந்துள்ளனர். இந்த விவகாரம் முதலமைச்சரின் காதுகளுக்கும் சென்றுள்ளது. அதனால் திமுக கூட்டத்தில் அமைச்சர்களையும் மாவட்ட செயலாளர்களையும் வைத்தே நேருக்கு நேர் கேள்விகளை அடுக்கியுள்ளார் ஸ்டாலின். ரேஷன் கடைகள் ஆங்கன்வாடிகளில் உள்ள இடங்களை ஏன் இன்னும் நிரப்பவில்லை? கட்சிக்காரர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுக்கலாமே என கேட்டுள்ளார்.
காலி இடங்களை நிரப்புவதற்கு ஆட்களை தேர்வு செய்து ஏற்கனவே லிஸ்ட் கொடுத்துவிட்டோம் என மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை பார்த்து கை காட்டியுள்ளனர். அப்போது ஒவ்வொரு பணிக்கும் நிறைய பேரின் பெயர்களை மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைத்துள்ளதால், யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருப்பதாக அமைச்சர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்கள் பக்கம் திருப்பி விட்டுள்ளனர். அப்போது மீட்டிங்கிலேயே வைத்து இரண்டு தரப்புக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை பார்த்து உடனடியாக லிஸ்ட் தயார் செய்து காலி இடங்களை நிறுப்ப வேண்டும் என ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளார் ஸ்டாலின். கட்சிக்காரர்கள் அதிருப்தியில் இருந்தால் தேர்தல் வேலைகள் எப்படி நடக்கும்? நம்முடைய கட்சிக்காரர்களுக்கே எதுவும் கிடைக்கவில்லை என்றால் எப்படி என்று சீனியர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் உடனடியாக அந்த வேலையை முடித்து விடுகிறோம் என அமைச்சர்கள் ஸ்டாலினிடம் உறுதி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு இது கூட தெரியாதா? எவ்ளோ பெரிய அசிங்கமாகிருக்கும்..! லைப்ட் & ரைட் வாங்கிய நயினார்..!