"பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!
வரும் தேர்தலில் பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும் சீர்காழி பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சீர்காழியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 6 வேட்பாளர்களுக்கு வாக்கு கோரி பேசிய முதல்வர், திருவாரூரில் பிரச்சாரத்தை துவங்கி இன்று சீர்காழிக்கு வந்துருக்கேன் நான் உங்கள் ஊர் மாப்பிள்ளை உங்கள் ஊர் மருமகனா வாக்கு கேட்டு வந்துருக்கேன் நாகை எப்போதும் வாகை சூடும் ஊர், மயிலாடு மாவட்டத்திலும் திமுக 100% வெற்றி உறுதி உறுதியா என்று கேட்டார்.
பூம்புகார், மயிலாடுதுறை சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம், கீழ்வேளூர் ஆகிய 6 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தியவர். 6 வேட்பாளர்களையும் மாபெரும் வெற்றியடையச்செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிக்கு செய்துமுடித்த பணிகளை விவரித்தவர்.
மயிலாடுதுறை - நாகப்பட்டினம் மாவட்டங்கள் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த மாவட்டம் என்றும் மீனவர், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திட்டங்களை செய்து கொடுத்து பேசுகிறேன் என்றார்.
இதையும் படிங்க: 23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
தேர்தல் கருத்து கேட்பு திமுக வெற்றி பெரும் என்று வருவதால் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுகிறார். 2026 தேர்தலில் பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும் என்றவர்.அ.தி.மு.க வையும் பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.கவினர் தேர்தலுக்காக தமிழகத்திற்கு படையெடுக்கின்றனர். வரும் தேர்தலில் அ.தி.மு.க வும் - பா.ஜ.க வும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறக்கூடாது எனக்கூறினார்.
ஒன்றிய அரசு தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கிறது மகாராஸ்ட்ரா மாநில முதல்வர் மதுரையில் பேசிய போது மதுரையில் பா.ஜ.க வென்றால் மெட்ரோ வரும் என்று பட்னாஸ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தவர். 6 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்துவிட்டது ஊழல் நிறைந்த பா.ஜ.க அரசு தமிழகம் வளரக்கூடாது என்று நினைக்கிறது
தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார். வாக்கு எண்ணக்கூடிய நாள் கல்யாண நாள் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள் நிச்சயதார்த்த நாள் என்றவர். 8 ஆயிரம் கூப்பனைக் கொண்டு உங்களுக்கு பிடிச்ச பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் தாய்மார்கள் என்ன வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க என்றவர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 என்பது 2000 மாக உயர்த்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையை விவரித்தவர். சாதனையோடு துணிச்சலாக பேசும் திராவிட மாடல் ஆட்சி வேண்டுமா அல்லது அடிமை டெல்லி அணியா என்று மக்களிடம் கேட்டபோது திராவிட ஆட்சிதான் என மக்கள் ஆர்ப்பரித்தனர்.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் களமிறங்கும் EPS..! ஏப்.8ல் சூறாவளி பிரச்சாரம்..!!