×
 

"வேற வேலையில்ல..." - எடப்பாடி பழனிச்சாமியை படு பங்கமாய் நோஸ் கட் செய்த ஸ்டாலின்...!

எஸ்ஐஆர் குறித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நா ளை கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம் இருக்கிறது அதன் பிறகு பாருங்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு துறை அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் 223.06 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த 577 திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் 201.70 கோடி மதிப்பீட்டில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 341.77 கோடி மதிப்பில் 43993 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை (மொத்தம் 766.53 கோடி) வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளதாவதுஎஸ்ஐஆர் - ஐ ஆதரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஏன் உச்சநீதிமன்றத்திற்கு சென்று திமுகவின் பெட்டிசனில் ஏன் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வேலையில்லை. அதனால் விமர்சனங்களை முன் வைக்கிறார். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.  நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். 

எஸ்ஐஆர் குறித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நா ளை கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம் இருக்கிறது அதன் பிறகு பாருங்கள். கூட்டத்தை பார்க்கும்போது மட்டுமல்ல எப்போதுமே மனசு நன்றாக தான் இருக்கிறது. 

இதையும் படிங்க: "வாக்காளர் பட்டியலில் வடமாநில தொழிலாளர்கள்"... திமுகவினருக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட கே.என்.நேரு...!

எதிர்க்கட்சிகளுக்கு வேலை கிடையாது. அதனால் அவர்கள் விமர்சனத்தை தான் செய்தாக வேண்டும். எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும். ஏழாவது முறையாக திமுக நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.

எதிர்க்கட்சியின் பலவீனத்தை பலமாகவும் பார்க்கவில்லை. பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம் என்றார்.

இதற்கு முன்தாக நிகழ்ச்சியில் மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? எனப் பாருங்கள். உங்கள் வாக்குச்சாவடியில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா எனவும் கண்காணியுங்கள்” என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க: "சூதானமா இருங்க... செத்து போயிட்டதா சொல்லிடுவாங்க..." - அதிமுகவினரை அலர்ட் செய்த தங்கமணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share