×
 
☰

அடிதூள்...!! - மெரினாவில் அடுத்த பிரம்மாண்டம்... லைட் ஹவுஸ் டு அடையாறு திரு.வி.க பாலம் வரை... மாஸ் அறிவிப்பு...!

சென்னையில் லைட் ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னையில் 4 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை 4 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டத்துக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்காக, நெடுஞ்சாலைத் துறையின் சென்னை நகரச் சாலைகள் கோட்டம்-1 சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலூர் துயரம்... பட்டாசு ஆலை வெடி விபத்து..! முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு..!!

திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கான மதிப்பீட்டுத் தொகையாக ரூ.38 லட்சத்து 10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் ரூ.29,500-ஐ முன்வைப்புத் தொகையாக மின்னணு வங்கி முறையில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதி கொண்ட ஒப்பந்ததாரர்கள் இதில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மெரினா கடற்கரைச் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முக்கியத் திட்டமாக இந்த உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

மெரினா கடற்கரைச் சாலைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவதால், சாதாரண வார நாட்களிலேயே அப்பகுதியில் அதிகக் கூட்டம் காணப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், லைட் ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை 4 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டத்துக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

இதையும் படிங்க: “சட்டம் ஒழுங்கை காப்பாத்த முடியல... ஆனா....” - விஜய் அரசை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share