×
 

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து த.வெ.க., அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகத் தூய்மை நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “எந்த அரசுத் துறையிலும் உங்களிடம் ₹1000 கூட லஞ்சம் கேட்டால், ஆதாரத்துடன் புகார் செய்யலாம். புகார் அளிப்பவருக்கு ₹1 லட்சம் சன்மானம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்களைப் பதிவு செய்ய 1800 425 1555 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் கடிதம்!

முதலமைச்சர் விஜய் தானே ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல உரிய நேரத்துக்கு அலுவலகம் வந்து பணியாற்றுவது அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொடமாட்டேன்” என உறுதியளித்துள்ள முதல்வர், ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை வழங்க உறுதியாக உள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கு கடந்த 16-ம் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. நேற்று 9 அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தில் தங்கள் அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க., ஆட்சியின் முதல் முக்கிய அறிவிப்பாக இந்த லஞ்ச ஒழிப்பு திட்டம் அமைந்துள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இந்த திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி, லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் பிடியில் செந்தில்பாலாஜி குடுமி! ஆப்பு வைக்கும் அமலாக்கத்துறை! கோரிக்கையை ஏற்குமா தவெக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share