மக்களை பாதிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! முதல்வர் விஜய் கறார்! அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு ரத்து?!
மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது; என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்துக்கான காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யிடம் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.
கடந்த ஜூன் 10-ம் தேதி இயற்கை வளத் துறை வெளியிட்ட அரசாணைப்படி, இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (ஐஆர்இஎல்) நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் காலம் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார், கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பட் மற்றும் டி.டி.பிரவீன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து விரிவான மனு அளித்தனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக சிதறிக்கிடக்கிறது! தவெகவில் இணைந்த காரணம் அதுதான்! வளர்மதி ஓபன் டாக்!
மனு அளித்தபோது, கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் கடலோர சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மனுவை கனிவுடன் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், “மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உங்கள் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
இந்த முடிவு கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் உள்ளூர் எம்எல்ஏக்களின் உடனடி நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறை தமிழகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.
இதையும் படிங்க: இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!