×
 

ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

கல்வித்துறையால் நிறைவேற்ற முடியும் அளவில் உள்ள, ஆசிரியர்கள் கோரிக்கைகளை பட்டியலிட்டு அவற்றின் மீது உடன் நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வித்துறையால் உடனடியாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை பட்டியலிட்டு, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முந்தைய ஆட்சியில் இருந்தது போல தேவையற்ற காலதாமதம் ஏற்படக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, கல்வி அமைச்சர் ராஜ்மோகன், 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இரண்டு நாட்கள் விரிவான ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி! கோவில் டெண்டர்களில் இனி முழு வெளிப்படைத்தன்மை! அமைச்சர் ரமேஷ் அதிரடி!

இந்தக் கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம், போராட்டங்களால் சம்பள இழப்பு ஏற்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குதல், ஊக்க ஊதிய பாதிப்புகளை சரிசெய்தல் மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் தகவலின்படி, போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான 27 நாட்கள் சம்பளத்தை வழங்குவது, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது, ஊக்க ஊதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் டெட் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் தொடர்பான முடிவுகளை எடுப்பது போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றக்கூடியவை என அரசிடம் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு கல்வித்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெற்றதாகவும், உடனடியாக செயல்படுத்தக்கூடிய கோரிக்கைகள் குறித்து தனி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அவற்றை விரைவாக நிறைவேற்ற முதல்வர் தரப்பில் தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் பட்சத்தில், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சில முக்கிய கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை ஆசிரியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் எல் நினோ எச்சரிக்கை... அரசின் அதிரடி முடிவு! கண்காணிப்பு குழுவில் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share