×
 

துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குடும்பத்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் மோகினி மணி உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், 'தல' 'AK' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். இந்தச் செய்தி தமிழ் திரையுலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் துக்க அலை பரவியுள்ள நிலையில், பல முன்னணி திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக மோகினி மணி காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவரது உடல்நிலை இன்று காலை திடீரென மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர். அஜித் குமாரின் தந்தை பி.எஸ். மணி 2023 மார்ச் மாதம் காலமானதற்குப் பிறகு, மோகினி மணி தனிமையிலும், உடல்நலக் குறைவிலும் வாழ்ந்து வந்தார். இந்த இழப்பு அஜித் குடும்பத்திற்கு இரட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயாரின் மரண செய்தி கிடைத்ததும், துபாயில் தனிப்பட்ட பயணத்தில் இருந்த அஜித் குமார் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டு வந்தடைந்தார். அஜித்தின் மூத்த சகோதரர் அனுப் குமார் மற்றும் இளைய சகோதரர் அனில் குமார் ஏற்கெனவே சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் இணைந்து இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் அஜித்குமாரின் மரணத்திற்கு நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இரங்கல் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில்.. அஜித்குமாருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!!

“அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்றும் அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் குறிப்பை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குடும்பத்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் மோகினி மணி உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படிங்க: கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share