கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!
கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ திட்டங்கள் வேண்டுமென பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்
தமிழக முதல்வர் விஜயின் அரசு முறை டெல்லி பயணம் குறித்து பொள்ளாச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததிர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 11ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா தற்போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் வருகை புரிந்தார்.
தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் வடம் பிடித்து தேர் இழுத்து பக்தர்களோடு இணைந்து சாமி தரிசனம் செய்தார் .தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மிகவும் சுலபமான துறை. லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைகளை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த துறை கடுமையானதாக இருக்கும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!
டாஸ்மாக் கடைகளில் 20 ரூபாய் பாட்டிலுக்கு கடந்த ஆட்சியில் வசூலிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ரூபாய் 10 மட்டுமே பாட்டிலுக்கு திரும்ப பெரும் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம்,காலம் முறை ஊதியம் குறித்து பரிசீலிக்கப்பட்டு தீர்வு எட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர்,மின் கட்டணம் குறித்த பிரச்சனைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
கோவையை சிறந்த மாநகரமாக உருவாக்குவதற்காக கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும்,முதலமைச்சர் விஜய் கோவைக்கு மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருவதற்காக மோடியை சந்தித்ததாகவும்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள் இருந்தால் அதிகப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!