புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!
“ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு வழங்கி, இந்திய விடுதலைக்காக சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட பாடுபட்ட வீரத்தியாகி செண்பகராமனின் பங்களிப்பும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றும் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு முதல்வர் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். சுதந்திரம், மனித உரிமை மற்றும் தமிழரின் அடையாளத்திற்காக போராடிய இந்த மூன்று தலைசிறந்த தியாகிகளின் தியாகம் என்றும் மறக்க முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில், ஆங்கிலேய ஆட்சியின் அதிகாரச் செருக்கை எதிர்த்து, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கி, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் ஆர்யா (எ) பாஷ்யத்தின் வீரச் செயலை முதல்வர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் வெளிப்படுத்திய துணிச்சல் தலைமுறைகள் போற்ற வேண்டிய வரலாறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அன்றைய சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய இலக்கிற்காக நீண்டகால உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த சங்கரலிங்கனாரின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியுள்ளார். தமிழின் பெருமையையும் மாநிலத்தின் அடையாளத்தையும் நிலைநிறுத்த அவர் செய்த தியாகம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?
மேலும், “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு வழங்கி, இந்திய விடுதலைக்காக சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட பாடுபட்ட வீரத்தியாகி செண்பகராமனின் பங்களிப்பும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றும் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இந்த மூன்று தியாகிகளின் தன்னலமற்ற சேவை, நாட்டுப்பற்று மற்றும் தியாக உணர்வு அனைத்து தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அவர்களின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் நிறைந்த புதிய சமுதாயத்தை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் விஜயின் இந்த தியாகிகள் தினச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் அவரது பதிவு, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!