இன்ஸ்டாவில் மாஸ் காட்டும் விஜய்..!! ராகுலை பின்னுக்குத் தள்ளிய 1.87 கோடி ஃபாலோவர்ஸ்..!!
பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.
சமீபத்திய காலங்களில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் அரசியல் பிரசாரத்தின் முக்கிய களமாக மாறியுள்ளன. இளைஞர்களை திரட்டி பெரும் போராட்டங்களை நடத்தும் திறன் இவற்றுக்கு உண்டு என்பது டெல்லியில் நடந்த நிகழ்வுகளில் தெளிவாகியது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் வழியாக இளைஞர்களை ஒன்று திரட்டி பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர். இது போன்ற டிஜிட்டல் திரட்டல் முறைகள் இன்று இந்திய அரசியலின் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. தற்போது அது 1.87 கோடியை எட்டியுள்ளது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 1.47 கோடி பின்தொடர்பாளர்களை விஞ்சி அவர் முன்னிலை பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் 10.2 கோடி பின்தொடர்பாளர்களுடன் முன்னணியில் இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 3.22 கோடியும், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை 66 லட்சமும் பின்தொடர்கின்றனர். மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாவுதீன் ஓவைசியை 1.25 கோடியும், டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தியை தலா 40 லட்சமும், திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலினை 23 லட்சமும் பின்தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!
இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இன்ஸ்டாகிராமை அதிகமாகப் பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவாயும் ஈட்டுகின்றனர். அதேபோல் தங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களையும் பின்தொடர்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சி நடவடிக்கைகளையும் அரசுத் திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க இந்த தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இளைஞர்களின் வலுவான ஆதரவு தேர்தல் வெற்றிக்கு உதவியதாகவும், அதனால் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை உயர்ந்ததாகவும் கருதப்படுகிறது. இன்ஸ்டாகிராம் இப்போது அரசியல் தகவல் பரிமாற்றத்தின் முக்கிய கருவியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கையை முறுக்கி ஆவேசம்... தவெக எம்.எல்.ஏ. தாக்கியதில் செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?