என் காசு ரூ.3 லட்சத்தை திருப்பி கொடுங்கண்ணே!! செந்தில்பாலாஜி கையை பிடித்து ரகளை! கோவில் நிர்வாகி சஸ்பெண்ட்!!
கோவை தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியின் கையை பிடித்து இழுத்த கோவில் பணியாளர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் காலையில், கோவையின் புகழ்பெற்ற காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். உடன்பிறப்புகளுடன் சென்ற அவர், வெற்றி வேண்டி கண்மூடி பிரார்த்தனை செய்துவிட்டு, தரிசனம் முடித்து வெளியேறினார்.
வாசலை நெருங்கும் போது திடீரென ஒருவர் ஓடிவந்து செந்தில் பாலாஜியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த செந்தில் பாலாஜி, அவரை ஆர்வமிக்க ஆதரவாளர் என்று நினைத்து, “கையை விடுங்க” என சிரித்தபடி கூறினார்.
ஆனால் அந்த நபர் கையை விடாமல், “அண்ணா... விட மாட்டேங்கண்ணா... மூணு லட்ச ரூபாய்க்கு மேல உங்க கவர்மெண்டுக்கு கொடுத்திருக்கேங்கண்ணா... அந்தப் பணத்தை திருப்பிக் கொடுங்கண்ணா...” என உரத்த குரலில் மன்றாடினார்.
இதையும் படிங்க: ஆ.ராசா பேசியது அத்தனையும் உண்மை!! ஆடியோ லீக் விவகாரம்!! கொளுத்தி போடும் அண்ணாமலை!
சற்று குழப்பமடைந்த செந்தில் பாலாஜி, “யார்ங்க இவர்? மூணு லட்சம் கொடுத்ததாகச் சொல்கிறாரே...” என கோவில் ஊழியரிடம் கேட்டார். உடனே அங்கிருந்த ஊழியர் பதறியபடி, “சார், இவர் நம்ம கோவில் தற்காலிக ஸ்டாப்தான். பெயர் ராமு. நெய் தீபம் விற்கிறவர்” என்றார். மேலும் ராமு மது அருந்தியிருப்பதாக சைகையால் தெரிவித்தார்.
கடுப்படைந்த செந்தில் பாலாஜி, உடனடியாக தன் கையை உதறினார். உடன் வந்தவர்கள் ராமுவை இழுத்து அப்புறப்படுத்தினர். இதற்குள் கோவில் அதிகாரி ஓடி வந்தார். செந்தில் பாலாஜி அவரிடம், “குடிச்சிட்டு வர்றவங்களை எப்படி கோவிலுக்குள் விடுறீங்க?” என எரிச்சலுடன் கேட்டுவிட்டு வெளியேறினார்.
சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மது போதையில் கோவிலுக்குள் பணியாற்றியதாக ராமு பணியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார். கோவையின் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் இப்படியொரு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே சாமி கும்பிடச் சென்ற செந்தில் பாலாஜிக்கு இந்த சம்பவம் சற்று அதிர்ச்சியை அளித்தது. தேர்தல் பிரசாரம் தொடங்கும் வேளையில் இத்தகைய சம்பவங்கள் அரசியல் களத்தில் புதிய பேச்சுக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, இனி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையை தேடிவந்த அதிமுக்கிய பதவி!! டெல்லி பயணத்தின் பின்னணி!! மொத்தமாக மாறும் பாஜக!