×
 

திமுகவை அதிர வைத்த காங்கிரஸ்! கூட்டணியில் அதிக இடங்களை வலியுறுத்தி மூத்த தலைவர்கள் அழுத்தம்! - ஆலோசனையில் அதிர்ச்சித் தகவல்!

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழுவுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நிலையில், 40 தொகுதிகள் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவிருக்கும் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வரை கேட்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட ஐவர் குழுவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக, காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்த முறை அதிக எண்ணிக்கையில், அதாவது 40 தொகுதிகள் வரை உறுதியாகக் கேட்க வேண்டும் என்று உறுதிப் பிடியாக வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அதிகபட்ச எதிர்பார்ப்பு, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸின் இந்த முடிவு, தமிழக அரசியல் அரங்கில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருட்டுத் தேர்தல் ஆணையம்… மோடியும், அமித் ஷாவும் பக்கா திருடர்கள்…! ஆ.ராசா கடும் விமர்சனம்..!

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மைத்ரேயனுக்கு அடிச்சுது ஜாக்பாட்..!! கட்சி தாவிய 3 மாசத்துல இப்படி ஒரு பதவியா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share