அரசியலில் பரபரப்பு..! திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு.. கார்கேவுக்கே முழு அதிகாரம்..!!
காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவெடுக்க மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் இருப்பதாகக் கூறப்படும் தகவல், தற்போதைய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. இவை காங்கிரஸ் கட்சியின் உள் அமைப்பு மற்றும் தலைமை முடிவெடுக்கும் முறையைப் பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் உயர்மட்ட முடிவுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.
குறிப்பாக, மாநில கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு, ஆட்சி பங்கீடு போன்ற விவகாரங்களில் அவரது கருத்து மற்றும் ஒப்புதல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த உறவில் சில பதற்றங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆட்சியில் பங்கு என்பதற்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக திமுக மறுத்துள்ள நிலையில் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் - தவெக கூட்டணி... தற்கொலைக்கு சமம்..! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா ஆதங்கம்..!!
இந்த நிலையில்,தமிழ்நாட்டில் திமுகவுடனான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மல்லிகார்ஜூனா கார்கே வசம் ஒப்படைக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!