அதிரும் அரசியல் களம்... காங்கிரஸில் இணைய முடிவெடுத்த விஜய்... சீக்ரெட் மீட்டிங் உண்மையை போட்டுடைத்த ஜோதிமணி...!
விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவெடுத்து இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அது நிறைவேறவில்லை என்றும் கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்காளர் தீவிர திருத்தல் பணிகள் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் ஒருவிதியும், மற்ற மாநிலங்களில் ஒரு விதியும் இருந்தால் எவ்வாறு தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த முடியும்.
ராகுல்காந்தி விஜயிடம் பேசியது குறித்து கேட்டதற்கு விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. விஜய் கடந்த 2010-ல் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைய வந்தவர், அன்று சில காரணங்களால் அது நடக்கவில்லை. அவர் எங்களுக்கு தெரியாத நபரும் அல்ல. கரூர் துயர சம்பத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பேசியது போல், அவரும் பேசினார் என்றார்.
சமூக வலைதளங்களில் வருவதை வைத்து கூட்டணிகளை முடிவு செய்ய இயலாது. நாங்கள் இப்போதும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் கூட்டணி குறித்து பேச இன்னும் காலம் இருக்கிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: RSS சித்தாந்தத்தில் ஒன்றுபட்ட விஜய்... சும்மா கண்துடைப்பு... சபாநாயகர் அப்பாவு விமர்சனம்...!
ராகுல் காந்தி - விஜய் சந்திப்பு:
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பிக்கும் முன்பாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது தான் புதிதாக கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக ராகுல் காந்தியுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் உடன் இணைய விஜய் சம்மதிக்கவில்லை என்பதாலும், தமிழ்நாட்டில் தற்போது பலம் பொருந்திய கட்சியாக உள்ள திமுகவை விட்டு விலக காங்கிரஸ் தயாராக இல்லாததாலும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையானது கைவிடப்பட்டது.
அதன் பிறகு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது சட்ட ஆலோசனை கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்பட்டது. அப்போது ராகுல் காந்தி விஜய்க்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படி யூகங்கள் அடிப்படையில் வெளியான செய்திகள் அனைத்துமே உண்மை என்பது போல், கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ள கருத்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையா? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி..!