RSS சித்தாந்தத்தில் ஒன்றுபட்ட விஜய்... சும்மா கண்துடைப்பு... சபாநாயகர் அப்பாவு விமர்சனம்...!
விஜய் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தில் ஒன்றுப்பட்டிருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளை ஒட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் சபாநாயகர் அப்பாவு வ.உ. சிதம்பரனார் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டும் என்றால் டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும் என்று கூறினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்க வேண்டும் என்றும் அதை விட்டுவிட்டு எஸ் ஐ ஆர் என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராக போராடுவது வெறும் கண்துடைப்பு தான் என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு விஜய் போராடி வருவதாகவும், இப்படி போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை எனவும் தெரிவித்தார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக போராட்டம் என்று சொல்லிவிட்டு எஸ்ஐ யாருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் தமிழக அரசுக்கு எதிராகவே விஜய் பேச இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்த பயமும் இல்லை என்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினம்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கலாம் என தேர்தல் ஆணையமே சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் இந்த விஷயம் தமிழக வெற்றி கழகத்திற்கு தெரியாது என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் நலன் காக்க... நெல் ஈரப்பதத்தை உயர்த்துங்கள்... பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!