×
 

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆவேச பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி..!

நிதி ஆயோக் கூட்டத்தை ஒருமுறை புறக்கணித்தால் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என சட்டம் உள்ளதா ?... முதல்வர்  கூட்டத்திற்கு செல்வது சரியான விஷயம். அதிமுக இதில் தவறான பிரச்சாரத்தை செய்கிறது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லிற்கு இன்று வருகை தந்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி வருகை தந்தார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மாநில ஆளுநர்கள் சட்டமன்ற  உரிமையைக் பறிக்க கூடாது. எவ்வித காரணம் இன்றி ஒத்தி வைக்க கூடாது. மாநில அரசை முடக்க கூடாது என தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.  சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றினால் ஆளுநர் தவிடு பொடியாக்குகிறார். அவருக்கு அரசியல் சாசனத்தில் தலையிட உரிமை இல்லை. 

மீண்டும் இரண்டு விதமான  தாக்குதல் மாநில அரசு மீது மத்திய அரசு தொடுத்து இருக்கிறது. குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த கால தீர்ப்பு சரியானதா கடிதம் எழுதி பல்வேறு கேள்வி கேட்டுள்ளனர் . இரண்டாவது சென்னை உயர்நீதிமன்றம் முதல்வருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை பறித்துள்ளது. இரண்டும் மாநில உரிமைகள் மீதான போர் என்று தான் சொல்ல வேண்டும் மத்திய அரசின் ஆளுமையை நிலைநாட்டப் பார்க்கிறார்கள் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒன்னும் கொத்தடிமைகள் அல்ல அரசியல் சட்டம் சம உரிமை வழங்கி உள்ளது மாநில அரசும் மத்திய அரசும் சமமானவை என நிரூபித்துள்ளது. 

இதையும் படிங்க: அப்போ என்ன செஞ்சீங்க.? இப்போ என்ன செய்யுறீங்க.? திமுக அரசை போட்டு தாக்கிய பாலகிருஷ்ணன்.!

முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்கிறார் இது வரவேற்கத்த விஷயம். தமிழகத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசால் தடை படுத்தப்படுகிறது. நிலைமை மாற வண்டும். ஜி.எஸ்.டி , ஐ.டி போன்ற பல்வேறு விதமான வரி விதிப்பு மூலமாக மத்திய அரசுக்கு தருகின்ற சதவீதம் அளவிற்கு திருப்பித் தருவதில்லை. தமிழகத்திற்கு தரக்கூடிய பங்கு குறைவாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள் உழைக்கிறார்கள், வரி அதிகமாக கொடுக்கிறார்கள். உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் தொழில் சரியாக நடக்கவில்லை. அங்கு அரசாங்கம் ஜாதி மதத்தால் பிளவு பட்டிருக்கிறது. அங்கு வளர்ச்சி இல்லை. முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் செல்வது சரியான விஷயம். அதிமுக இதில் தவறான பிரச்சாரத்தை செய்கிறது. பிரதமரை சந்தித்து சரண்டர் ஆவது. அவர்களது பழக்க வழக்கத்தை சொல்கிறார்கள்.

ஒருமுறை ஸ்டாலின் புறக்கணித்தார் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்று சட்டம்  ஏதும் உள்ளதா ?. கடந்த முறை புறக்கணிக்கவில்லை.  முதல்வர் செல்லவில்லை ஆனால் நிதியமைச்சர் சென்றார். இந்த முறை அதிக முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் செல்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது. அதிமுகமத்திய அரசிடம் சரண்டரானீர்கள், வெள்ளைக்கொடி பிடித்தீர்கள். 

இந்தியாவிலேயே இருக்கக்கூடிய முதலமைச்சர்களின் மத்திய அரசை கடுமையாக எதிர்க்க கூடிய முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. 

டாஸ்மாக் விவாகரத்தில் சோதனை நடந்துவிட்டால் குற்றவாளியா. எப்படி சாத்தியம். நீதிமன்றம் தீர்ப்பு சொல்லாமலேயே குற்றவாளி என சொல்ல முடியுமா. அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்படுகிறது. டாஸ்மாக்கில் தவறு இருந்தால் தண்டனை கொடுங்கள். அதை காங்கிரஸ் மறுக்கவில்லை. விசாரணை என்று சொல்லிவிட்டு அதை முழுக்க ஊழல் என்று சொல்வது என்ன அர்த்தம்.  தமிழக ஆளுநர் எல்லா இடங்களுக்கும் மத சம்பந்தமான விஷயங்களை பேசுகிறார். அது தவறானது. ஆர்.எஸ் எஸ் மாதிரி நடந்து கொள்கிறார் என கூறினார்.

இதையும் படிங்க: 2026 எலெக்‌ஷனுக்குப் பிறகு  அதிமுகவுக்கு அந்த அந்தஸ்து கூட இருக்காது... அடித்து சொல்லும் ஐ.பெரியசாமி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share