×
 

விஜய் சொன்னது உண்மைதான் போலயே?! காங். பொறுப்பாளர்கள் பட்டிலயில் தவெக நிர்வாகிகள் எப்பிடி?

உண்மையான காங்கிரஸ் கரைஞ்சு காத்தோட காத்தாகி பல காலம் ஆகிடுச்சு போல என அரசியல் விமர்சகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய விஜய், “காங்கிரஸ் கட்சியை தி.மு.க. சில கோடிகளுக்கு வாங்கிவிட்டது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்பது கல்லாப்பெட்டி கூட்டணி” என்று கூறினார். இந்தப் பேச்சு காங்கிரஸ் முகாமில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர். “விஜய் கூறியது தவறு. காங்கிரஸ் கட்சியினர் யாரும் தவெகவுக்கு செல்லவில்லை” என்று அவர்கள் வலியுறுத்தினர். அதேநேரம், காங்கிரஸ் ஓட்டுகள் தவெக பக்கம் செல்வதைத் தடுக்கவும், கட்சியினரை உற்சாகப்படுத்தவும் 234 தொகுதிகளுக்கும் தலா ஆறு பேரை தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

மாநில நிர்வாகிகள் ராம்மோகன், அசோகன், வாசு உள்ளிட்டோர் பட்டியலைத் தயாரித்தனர். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்புதலுடன் அந்தப் பட்டியல் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. ஆனால் வெளியான அடுத்த அரை மணி நேரத்திலேயே அந்தப் பட்டியல் அவசர அவசரமாக நீக்கப்பட்டது.

இதையும் படிங்க: கொளுத்திப் போட்ட விஜய்!! கொந்தளிக்கும் திமுக!! ராகுல்காந்தியை பதில் சொல்ல சொல்லுங்க!! மு.க.ஸ்டாலின் கறார்!

இதற்குக் காரணம், பட்டியலில் பல தவறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை பொன்வண்டு ரவி என்பவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் டி.செல்வத்துடன் தவெகவுக்கு சென்றுவிட்டதாகத் தெரியவந்தது. மேலும், மாவட்டத் தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல் சிலரின் ஆதரவாளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் கராத்தே செல்வம், வட சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் டில்லிபாபு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய பட்டியல் மாவட்டத் தலைவர்கள் ஒப்புதலுடன் தயாராகி வருவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை அரசியல் விமர்சகர்கள் கிண்டலடித்து, “விஜய் சொன்னது சரிதான் போல... உண்மையான காங்கிரஸ் கரைஞ்சு காத்தோட காத்தாகி பல காலமாகிவிட்டது போல” என்று பேசி வருகின்றனர். 

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த உள்கட்சி குழப்பம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: காரைக்குடி மக்களை ஏமாற்றிய விஜய்!! 6 மணி நேரம் காத்திருந்தும் பேசாமல் சென்றதால் ஏமாற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share