×
 

“என்னையா அழ விட்டீங்க”... திமுகவின் கூட்டணி அஸ்திவாரத்தை அசைக்க ஆரம்பித்த கே.எஸ்.அழகிரி... போட்டாரே ஒரு போடு...!

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடமிருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் எனவும் ஆட்சியில் பங்கு கேட்போம் எனத் தெரிவித்துள்ளார்.  

குறைவான தொகுதிகளை ஒதுக்குவதாகப் பேசுவதுகூடப் பரவாயில்லை. பேச்சுவார்த்தையின் போது தி.மு.க நம்மை நடத்தும் விதம்தான் வேதனையாக இருக்கிறது என கடந்த மக்களவை தேர்தல் தொகுதி பங்கீட்டின் போது அப்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரி கண்ணீர் விட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அவர் கூறியுள்ள கருத்து திமுகவின் கூட்டணி அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்துள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சிதம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:   வக்ஃபு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து மோடி அரசியலமைப்பு சட்டத்தையே சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார். நேரடியாக அரசமைப்பு சட்டத்தை எதிர்க்கிறேன் என்றால் அதிகமாக எதிர்ப்புகள் வரும். ஆனால் அதற்கு மாறாக அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான விஷயங்களை தனக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காக தீர்மானத்தைக் கொண்டு வந்து ஒரு நிறுவனத்தின் மீது அதை திணிக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை சிதைப்பதற்கான ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதை வக்ஃபு வாரியத்தின் மீது திணிக்கிறார்கள்.

சங்கர மடத்திற்கு இஸ்லாமியர் நிலம் கொடுத்தால் அதை சங்கராச்சாரியார் வேண்டாம் என்று சொல்கிறார்களா? ஏற்றுக்கொள்கிறார்கள். வாக்கு திருட்டு சம்பந்தமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒரு கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து இருக்கிறது. இன்று அதை துவக்கி இருக்கிறார்கள். சட்டமன்றத் தொகுதி தேர்தலில் நான் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் சிதம்பரம் தொகுதியை கேட்போம். சிதம்பரம் தொகுதி மட்டுமல்ல, நிறைய தொகுதிகளை கேட்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

இதையும் படிங்க: திமுக- ன்னா சும்மாவா? இந்த 76 வருஷமும்...! மார்தட்டிய முதல்வர் ஸ்டாலின்

தொகுதிகளை கேட்பது மட்டுமல்ல எங்களது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார். நாங்கள் அதிக இடங்களில் போட்டியிடவும் விரும்புகிறோம். அரசாங்கத்தில் பங்கு பெறவும் விரும்புகிறோம். எங்கள் சட்டமன்றக் தலைவர் ராஜேஷ் கூறியது சரியான கருத்து. 

50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து சாறை அவர்கள் குடிப்பதற்கும், சக்கையை நாங்கள் பார்ப்பதற்குமான ஒரு சூழல் நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி வெற்றி பெறுகின்ற அரசாங்கத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்கின்ற நிலையில் உள்ளோம். ஆனால் ஒன்று. எங்கள் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் இருக்கிற இந்தியா கூட்டணியில்தான் இருப்போம்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற நச்சுப் பாம்புகளை அழிப்பதற்கான கூட்டணி இதுதான். அந்த காரணத்திற்காக மட்டுமே எங்களது உரிமைகளை நாங்கள் இழந்து விட மாட்டோம். கடமையை செய்கிற நேரத்தில் உரிமையையும் நாங்கள் கேட்போம். கடமை தவற மாட்டோம். அதே நேரத்தில் உரிமைகளை கேட்போம். எங்கள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் அதைத்தான் சொல்லியிருக்கிறார். அதிக இடங்களில் போட்டியிடுவோம். அரசாங்கத்திலும் பங்கு பெறுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை.

 எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி அந்த காலத்திலேயே ஔவையார் போகாத இடங்களில் போக வேண்டாம் என்று கூறியிருக்கிறார் என கூறினார். நடிகை கங்கனா ரணாவத் பற்றிய கேள்விக்கு பதிலளித்து அழகிரி,

    பலமுறை கொழுப்பாக பேசி இருக்கிறார். ஒருமுறை அவரை ஏர்போர்ட்டில் ஒரு பெண் போலீஸ் காவலர் ஓங்கி அறைந்தார். ஏன் என்று கேட்டபோது அவர் மோசமாக பேசினார். அதனால் அறைந்தேன் என்று கூறுகிறார். அதுபோல் இந்த பக்கம் எப்போதாவது வந்தபோது நீங்கள் அவரை அறையலாம் என்ன நகைச்சுவையாக கூறினார்.
 

இதையும் படிங்க: முதல்வர் முகத்தை மூடிக்கணும்... எதுக்கு சொன்னோம் தெரியுமா? அதிமுக விமர்சனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share