“ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!
ஒரு தலைமுறை ஸாம்பிக்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பிற நாடுகள் சமூக வலைத்தளங்களுக்கு சட்டங்களை இயற்றும் பொழுது இந்தியா ஏன் அதற்கு தயங்குகிறது
கோவை ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் வீ த லீடர் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறும் போது: நேபாள் சம்பவம்- சீன அரசு 2023 வரை அனுமதி கொடுக்காமல் 2025 முதல் அனுமதி கொடுக்கப்பட்டதால் அதிகமானோர் அங்கு சென்றனர். நேற்று நடைபெற்ற சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. ஈஷா அமைப்பு 73 பேர் காணாமல் போய் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். சீன அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக அதிகமான உயிரிழந்திருப்பதாக கூறி இருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக இங்கிருந்து ஒரு மீட்பு குழுவை அங்கு அனுப்பி வைக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டு அந்த யாத்திரைக்கு நான் சென்று இருக்கிறேன் அது மிகவும் சவாலானது. அங்கு உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வருவது மிகவும் கடினம் எனவே தமிழக அரசு வேகமாக ஒரு மீட்பு குழுவை அங்கு அனுப்ப வேண்டும். உறுதியான தகவலை மக்களுக்கு கொடுக்க வேண்டும். கைலாய யாத்திரை சென்று உயிரிழந்தவர்களுக்கு எங்கள் சார்பில் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்லூரியில் மாணவர்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை மாணவர் சங்கங்களை ஊக்குவிக்கவில்லை என்றால் அதில் அதிகமானோர்க்கு கல்லூரியில் மக்கள் மத்தியில் மக்கள் பிரதிநிதிகளிடம் எப்படி பேசுவது என்பது கூட தெரியாமல் போய்விடும். கல்லூரி அரசியல் சரியாக இருந்தால் பல பிரச்சனைகளுக்கு அதுவே தீர்வாக இருக்கும். தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிக மிக மோசமாக உள்ளது எனவே அரசியல் கட்சிகளுக்கு வரக்கூடிய இளம் தலைவர்கள் நமக்கு கிடைப்பதில்லை. கல்லூரியில் அரசியல் கற்றுக்கொண்டு வேறு துறைகளில் நிபுணர்களாக செல்லக்கூடிய வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: “சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறக்கூடாது...” - சி.எம்.விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்...!
டாக்சிக் திரைப்பட விமர்சனம் குறித்தான கேள்வி- இந்தியாவைப் பொறுத்தவரை சென்சார் போர்ட் கடுமையாக இருக்க வேண்டும் வளர்ந்த நாடுகளில் சென்சார் போர் மிகவும் கடுமையாக உள்ளது. திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என நான் கூறவில்லை ஆனால் முறைப்படி சென்சார் செய்யப்பட வேண்டும். யார் திரைப்படத்திற்கு செல்லலாம் செல்லக்கூடாது என்பதை திரையரங்குகள் கூற முடியும். சென்சார் போர்டு இருந்தாலும் கூட சில திரையரங்குகள் அனைவரையும் அனுமதிக்கின்றனர். சில திரைப்படங்கள் மாணவர் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளது. எனவே சரியான இடங்களில் சென்சார் குறியீடுகளை பயன்படுத்த வேண்டும். எவ்வளவு பெரிய பிரபலம் நடித்திருந்தாலும் சென்சார் போர்டு எந்த காட்சிகளை அனுமதிக்க வேண்டும் எந்த காட்சிகளை அனுமதிக்க கூடாது என்பதை முடிவெடுக்க வேண்டும்.
சமீபத்தில் வெளியாகும் சில திரைப்படங்கள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திரைப்படங்களாக இல்லை. ஒரு பக்கம் பெண்கள் பாதுகாப்பு பெண்கள் முன்னேற்றம் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பக்கம் சினிமா பெண்களை தரம் தாழ்ந்து ஆபாசமாக சித்தரிக்கின்றன. சினிமா என்பது மிகவும் வலிமையான மீடியம்.
சமூக வலைத்தள நிறுவனங்களில் ரெவென்யூவில் இந்தியா தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அனைவரும் ஒவ்வொரு அக்கவுண்ட் வைத்துள்ளதால் நாம் அதற்கு அடிமையாகி விட்டோம் அதன் அல்காரிதம் நம்மை அடிமையாக்குகிறது. ஒரு தலைமுறை Zombie க்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்கா ஐரோப்பிய நிறுவனங்கள் வாழ்வதற்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்கள் சீமை எலி- Guinea pig போன்று இருந்து விடக்கூடாது. சில நாடுகளில் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளும் இதனை பரிசீலிக்க வேண்டும்.
சோசியல் மீடியாக்களை பார்த்து கொலை செய்கிறார்கள் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு அதனை எப்படி மறைத்து வெளியில் வரலாம் என்று பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நல்லதும் நடக்கிறது அதே சமயம் அதிகமாக கெட்டதும் நடக்கிறது. இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. பிற நாடுகள் சமூக வலைத்தளங்களுக்கு சட்டங்களை இயற்றும் பொழுது இந்தியா ஏன் அதற்கு தயங்குகிறது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!